தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 : வெற்றி யாருக்கு ? உடனுக்குடன் தகவல்கள்

Tamil Nadu Assembly Elections Results 2026 : தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்து மே 4, 2026 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. குறிப்பாக இந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறத்து உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 : வெற்றி யாருக்கு ? உடனுக்குடன் தகவல்கள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

Updated On: 

03 May 2026 16:49 PM

 IST

தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்து மே 4, 2026 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. குறிப்பாக இந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக மும்முனை போட்டி நிலவி வந்த நிலையில் இந்த ஆண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் போட்டியில் இணைந்தது. விஜய்யின் தவெக இளைஞர்கள் குறிப்பாக முதன்முறை வாக்காளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து அவரது வருகை இந்த தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி?

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கூட்டணி, அதிமுக, பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவியது. இந்த நிலையில் கூடுதலாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் சசிகலாவின் அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதனால் இந்த முறை போட்டி கடுமையாக இருப்பதால் யார் தேர்தலில் வென்று ஆட்சியமைக்கப்போகவது என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

அதற்கான முடிவு மே 4, 2026 அன்று தெரிந்து விடும். அதன் படி இதற்காக 75, 064 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் ஆகியவை 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவிருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 234 வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணிக்ககாக 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் செயல்முறையின் வெளிப்படத்தன்மையை உறுதி செய்ய 4,624 பார்வையாளர்கள் அவருக்கு துணையாக இருப்பார்கள்.

தபால் வாக்குகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 1, 135 கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் செயல்முறையின் நேர்மை மற்றும் சுமூகமான நடத்தையை உறுதி செய்வதற்காக அனைத்து மையங்களிலும் விரிவான மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Follow Us
Related Stories
வாக்கு எண்ணிக்கை முதல் இறுதி முடிவுகள் வரை.. 62 மையங்களில் என்ன நடக்கும்.. முழு விவரம் இதோ!
கூட்டணி கட்சிகளுக்காக விசிக சரியாகப் பணியாற்றவில்லை.. நிர்வாகிகளை விளாசிய திருமாவளவன்..
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்.. வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் எத்தனை பேர்?.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முழு விவரம்!
Tamil Nadu Election 2026 Results Live Streaming: தமிழ்நாடு தேர்தல் முடிவுகளை எங்கு, எப்போது பார்க்கலாம்?.. முழு விவரம்!!
பாஜகவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு.. முகவர்களுக்கு தேர்தல் பொறுப்பாளர் முக்கிய உத்தரவு!
தேர்தல் முடிவுக்கு ரெடியா? எடப்பாடியுடன் மாஜிக்கள் திடீர் சந்திப்பு.. சேலத்தில் நடப்பது என்ன?
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..