தமிழக தேர்தல் “பிக்பாஸ்”.. 234 தொகுதிகள்.. 4,618 வேட்பாளர்கள்.. வெளியானது இறுதி வேட்பாளர் பட்டியல்!

Tamil Nadu Election Final Candidates List : தமிழகத்தில் வெளியிடிப்பட்ட வேட்பாளர்கள் இறுதி பட்டியலின் அடிப்படையில், சட்டமன்ற தேர்தலில் 4,618 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இவர்களுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் செய்யும் பணிகள் உள்ளிட்ட வேகமெடுக்கத் தொடங்கி உள்ளன.

தமிழக தேர்தல் பிக்பாஸ்.. 234 தொகுதிகள்.. 4,618 வேட்பாளர்கள்.. வெளியானது இறுதி வேட்பாளர் பட்டியல்!

தமிழகத்தில் 4500 வேட்பாளர்கள் போட்டி

Updated On: 

10 Apr 2026 07:54 AM

 IST

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15- ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த மார்ச் 30- ஆம் தேதி முதல் ஏப்ரல் 6- ஆம் தேதி வரை தங்களுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வந்தனர். இதில், 234 தொகுதிகளில் சுமார் 7,599 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த ஏப்ரல் 7- ஆம் தேதி நடைபெற்றது. இதில், 5,139 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சரியாக பூர்த்தி செய்யப்படாத 2,460 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து, வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் நேற்று (வியாழக்கிழமை) ஏப்ரல் 9- ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில், சுமார் 500-க்கும் ஏற்பட்ட வேட்பு மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து, வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

234 தொகுதிகளில் 4,618 வேட்பாளர்கள் போட்டி

இதில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 4,618 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட உள்ள சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதே போல, அந்தந்த தொகுதிகளில் எந்தெந்த வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதிகளுக்கான தபால் வாக்கு சீட்டுகள் அச்சிடும் பணி இன்று தொடங்கி நடைபெறுகிறது. அதன்படி, தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, தபால் சீட்டுகள் அவர்களிடம் வழங்கப்பட உள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்திலேயே அதிகம்.. 73 வேட்பாளர்கள் களம் காணும் “ஹாட்” தொகுதி எது தெரியுமா?

தொகுதிகள் வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

மேலும், அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணக்கிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் 16 வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது சின்னங்கள் ஆகியவை இடம் பெறும். ஒரு தொகுதியில் 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்காக அதிகபட்சமாக 4 அலகுகள் சேர்க்கப்படும். இவற்றை 63 வேட்பாளர்கள் மற்றும் ஒரு நோட்டா பட்டன் இடம் பெறும்.

வேட்பாளர் பெயர்- சின்னங்கள் பொருத்தும் பணி

ஏற்கனவே தொகுதி வாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவற்றில் வேட்பாளர் பெயர் மற்றும் கட்சி சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்க உள்ளன. இதே போல, வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்குச்சீட்டு விநியோகம் செய்யும் பணியும் இன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது. அதன்படி, தமிழகத்தில் 75,000 வாக்குச்சாவடி மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வாக்குச்சாவடிகளில் 23,000 க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

மேலும் படிக்க: தமிழகத்தில் குறைவான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி.. “சிங்கிள் டிஜிட்” மோதல்… எத்தனை பேர் தெரியுமா!

Follow Us
Related Stories
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?