Tamil Nadu Election 2026 Live: நாளை தேர்தல்.. தயார் நிலையில் தமிழ்நாடு!
Tamil Nadu Election Updates : தமிழ்நாட்டை ஆளப்போவது யார் என்பதை தேர்வு செய்யும் தேர்தல் நாளை நடக்கவுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் தமிழக போலீசாரும், தேர்தல் பணிகளுக்காக 3.60 லட்சம் அரசு ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேற்கொண்டு தேர்தல் ஆணையம் பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது

தமிழ்நாடு தேர்தல்
LIVE NEWS & UPDATES
-
ஈபிஎஸ் கொடுத்த 10 வாக்குறுதிகள்
இளைஞர்கள், இளம் பெண்கள் சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கு விண்ணப்பித்தால் ஒற்றை சாளர முறையில் ஒரு மாதத்தில் உரிமம் வழங்கப்படும். அதற்கான மானியம் 25 % இருந்து 35 சதவீதமாக உயர்த்தப்படும் உள்ளிட்ட 10 வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.
-
அதிமுகவின் கடைசி நேர தேர்தல் வாக்குறுதிகள்
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுகவின் கடைசி தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டார். இதில், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ. 10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்பன 10 வாக்குறுதிகள் உள்ளன.
-
அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம் – உதயநிதி
திராவிட மாடல் 2.0 மலரட்டும். நம் மண், மொழி, பண்பாட்டைப் பாதுகாத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்வோம் – உதயநிதி
-
குரல் மீண்டும் ஒலிக்கட்டும் – உதயநிதி
பாசிச சக்திகளையும் – அதிமுக அடிமைக்கூட்டத்தையும் நமது வாக்கு எனும் ஆயுதத்தால் வீழ்த்துவோம். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்ற தலைவரின் குரல் மீண்டும் ஒலிக்கட்டும் – உதயநிதி
-
மகத்தான தேர்தல் வெற்றியாக நாம் அறுவடை செய்திட வேண்டும்
நமது தலைவர், கூட்டணித் தலைவர்கள் எல்லோரும் பல நாட்களாகப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். இந்த கடும் உழைப்பின் பயனை, மகத்தான தேர்தல் வெற்றியாக நாம் அறுவடை செய்திட வேண்டும் – உதயநிதி
-
உதயநிதி வேண்டுகோள்
மே 4ம் தேதி, இறுதிச்சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை நமது தேர்தல் பணி தொடர வேண்டும் என உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பெண் பணியாளர்கள் வீட்டுக்கு செல்லலாம்
பெண் பணியாளர்கள் மட்டும் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே வந்துவிட வேண்டும்
-
தேர்தல் பணியாளர்களுக்கு இன்று இறுதிக்கட்ட பயிற்சி
தேர்தல் பணியாளர்களுக்கு இன்று இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் பயிற்சியை முடித்ததும் தேர்தல் பணிக்கான உத்தரவு அளிக்கப்படும். இன்று இரவே அவர்கள் அங்குதான் தங்க வேண்டும்
-
40 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம்
வாக்காளர் பட்டியல் தொடர்பான எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்த நிலையில், சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன.
-
1.17 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில்
சிறப்பு அதிரடிப்படை பிரிவை சேர்ந்த 12,150 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தலைநகரான சென்னை மாவட்டத்தில் ஆவடி, தாம்பரம் மாநகர போலீசாரை தவிர்த்து 38 மாவட்டங்களில் 7 மாநகர காவல் துறை பகுதிகளும் 1.17 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
-
தேர்தல் பாதுகாப்பு
தேர்தல் பணிக்காக, மத்திய பாதுகாப்பு படையில் இருந்து சுமார் 295 கம்பெனிகளைச் சேர்ந்த சுமார் 23 ஆயிரம் துணை ராணுவ படையினர் தமிழகத்திற்கு வந்துள்ளனர். இதில், 26 ஆயிரத்து 203 இன்ஸ்பெக்டர்கள். சப் இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 94 ஆயிரத்து 598 தலைமை காவலர்கள் மற்றும் போலீசார் அடங்குவர்.
-
சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு
வாக்குப்பதிவு நாளில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடாமலும், அதனை தடுக்கும் வகையிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
வாக்குச்சாவடிகள் விவரம்
தமிழகம் முழுவதும் சுமார் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மாநிலத்தில் 3,022 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன
-
Tamil Nadu Election : நாளை தமிழ்நாடு தேர்தல்
தமிழகத்தில் நாளை வியாழக்கிழமை ( ஏப்ரல் 23) “ஜனநாயக திருவிழா” என்ற சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது
தமிழகத்தில் நாளை வியாழக்கிழமை ( ஏப்ரல் 23) சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த முறை தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணி கட்சிகளுடன் களம் காணும், அதிமுக மற்றும் திமுக. தனித்தனியாக களம் காணும் நாம் தமிழர் மற்றும் தவெக. ஆக, இத்தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 4,618 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். சட்டமன்ற தேர்தலுக்கான சூறாவளி பிரச்சாரம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ( ஏப்ரல் 21) 6 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுமார் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று தேர்தலுக்காக மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணப்படுவார்கள் என்பதால் ஸ்பெஷல் பேருந்துகள், ரயில்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.