மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு.. புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த பூமி பூஜை..
Tamilaga Vetri Kazhagam State Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இருக்கும் கூடக்கோவில் பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள்து. இதற்காக இன்று (ஜூலை 16, 2025) பூமி பூஜை நடத்தப்பட்டது, முதல் மாநாடு மதுரையில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோப்பு புகைப்படம்
த.வெ.க மாநாடு, ஜூலை 16, 2025: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் இருக்கக்கூடிய கூடக்கோவிலில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜூலை 16 2025 ஆம் தேதியான இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பூமி பூஜை நடந்தது. மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் மதுரை எஸ்பி -ஐ நேரில் சந்தித்து அனுமதி கேட்க உள்ளது தமிழக வெற்றிக்கழகம். தென் மாவட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை மற்றும் பலத்தை நிரூபிக்கும் வகையில் மதுரையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கினார். கட்சி தொடங்கியது முதலே 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என தெளிவாக கூறியிருந்தார். அதனை தொடர்ந்து மக்கள் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் தலைவர் விஜய்.
த.வெ.கவின் முதல் மாநாடு:
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு போதிய அனுமதி வழங்கப்படாத நிலையில் அந்த மாநாடு விக்கிரவாண்டியில் நடத்தப்பட்டது. விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் பொழுது கட்சியின் கொள்கை கோட்பாடுகள் குறித்து விளக்கினார் தலைவர் விஜய். இந்த மாநாடு பெரும் பேசு பொருளாக மாறியது. தற்போது தமிழகத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முணை போட்டிகள் நிலவி வருகிறது. அனைத்து கட்சிகள் தரப்பிலும் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றி கழகம் தரப்பிலும் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
Also Read: என் உயிருக்கு இவர்களால் ஆபத்து.. காவல் ஆணையரிடம் புகாரளித்த ஆதவ் அர்ஜூனா!
தேர்தலை சந்திக்க ஆயத்தமாகும் த.வெ.க:
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த ஆட்சியில் நடந்த லாக்கப் மரணங்கள் மரணங்களை கண்டித்து மிகப்பெரிய அளவில் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழக வெற்றி கழகம் தரப்பில் செயற்குழு கூட்டம், உறுப்பினர்கள் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பூத் ஏஜென்ட்கள் அமைப்பது, மாவட்ட வாரியாக பணிகள் குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Also Read: மக்களின் நலன்! அமித்ஷாவின் வீட்டின் கதவை தட்டுவது தவறா..? எடப்பாடி பழனிசாமி கேள்வி!
மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு:
தமிழக வெற்றிக் கழகம் இரண்டாவது மாநில மாநாடு
பந்தக்கால் நடும் விழாpic.twitter.com/74D3HEGtxo— தமிழக வெற்றிக் கழகம் IT WING (@Tvk_ITWING_) July 16, 2025
இப்படி இருக்கும் சூழலில் தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு என்பது மதுரையில் கூடக்கோயிலில் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக இன்று (ஜுலை 16, 2025) அதிகாலை கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பூமி பூஜை நடத்தபட்டது. அதனை தொடர்ந்து எஸ்.பி- ஐ நேரில் சந்தித்து அனுமதி கேட்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் பலத்தை காட்டும் வகையில் இந்த மாநாடு அமையும் என அரசியல் வல்லுனர்கள் தரப்பில் கூறப்படுகிறது