புதுச்சேரி தேர்தல் களம்.. பாஜக, காங்கிரஸ், தவெகவின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்.. ஒரு விரிவான பார்வை!

Puducherry Assembly Election: ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் (பொங்கல் மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு) இலவசமாக வழங்கப்படும். 12-ம் வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு 'அன்பு தங்கை' திட்டத்தின் கீழ் இலவச இ-ஸ்கூட்டர் வழங்கப்படும். மேலும், 'பிங்க் ஆட்டோ' திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.50,000 மானியம் என பாஜக வாக்குறுதி.

புதுச்சேரி தேர்தல் களம்.. பாஜக, காங்கிரஸ், தவெகவின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்..  ஒரு விரிவான பார்வை!

பாஜக, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள்

Updated On: 

05 Apr 2026 11:27 AM

 IST

Puducherry Polls 2026: புதுச்சேரியில் ஏப்.9ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தொடர்ந்து, அனைத்து கட்சித் தலைவர்களும் அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நேற்று முன்தினம் (ஏப்.3) பிரதமர் மோடி, புதுச்சேரிக்கு வருகை தந்து ரோடு ஷோ சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, நேற்றைய தினம் (ஏப்.4) தவெக தலைவர் விஜய் அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது விஜய், புதுச்சேரிக்கான தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்தார். அதேபோல், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் தங்களது தேர்தல் அறிக்கையில் முன்வைத்து அறிவித்துள்ளன.

இதையும் படிக்க: “பனையூர் வாசலில் நிற்கப் போகிறீர்களா?”.. பெரம்பூரில் விஜய்க்கு எதிராக அன்புமணி ராமதாஸ் காட்டம்..

தவெகவின் வாக்குறுதிகள்:

அதன்படி,விஜய் அளித்த வாக்குறுதிகள்,  “துணைநிலை ஆளுநரின் தலையீடு இல்லாத முழுமையான மாநில அந்தஸ்தைப் பெற சட்டப்படி 100 சதவீதம் முயற்சிப்போம். ஆறு மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும். 25 ஆயிரம் ரூபாய் மகப்பேறு உதவித் தொகை வழங்கப்படும். அனைத்து அரசு வேலைகளில் உள்ள காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும். 100 சதவீதம் பயிர் காப்பீடு வழங்கப்படும். மீன் பிடிக்கச் செல்வோருக்கு லிட்டருக்கு ரூபாய் 20 டீசல் மானியம் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் வரை கட்டணமின்றி மின்சாரம் வழங்கப்படும். மாநில பல்கலைக்கழகம் – புதுச்சேரி யூனிவர்சிட்டி ஆஃப் அப்ளைடு சயின்சஸ் அண்ட் ஆர்ட்ஸ் உருவாக்கப்படும். காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் 25 சதவீதம் வளர்ச்சி செலவீனங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய வாக்குறுதிகள்:

இதனிடையே,   அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள், முதலாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி கல்வி (Ph.D) வரை அனைத்து மாணவர்களுக்கும் முழுக்க முழுக்க இலவசக் கல்வி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டாயக் கல்வித் திட்டம் (RTE) தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும். அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் ரேஷன் கடைகள் வழியாக மாதந்தோறும் ரூ.2,500 மதிப்பிலான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். புதுச்சேரியின் நீண்ட காலக் கோரிக்கையான ‘முழுமையான மாநில அந்தஸ்து’, 2029-ல் ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் பெற்றுத் தரப்படும் என்று கார்கே உறுதி அளித்துள்ளார். பெண்களுக்கு ‘தாலிக்கு தங்கம்’ வழங்கும் திட்டம் மீண்டும் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பாஜகவின் முக்கிய வாக்குறுதிகள்:

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா முன்னிலையில் வெளியிடப்பட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையில், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் (பொங்கல் மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு) இலவசமாக வழங்கப்படும். 12-ம் வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு ‘அன்பு தங்கை’ திட்டத்தின் கீழ் இலவச இ-ஸ்கூட்டர் வழங்கப்படும். மேலும், ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.50,000 மானியம் மற்றும் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படும்.

புதுச்சேரி அரசுப் பணிகளில் (குரூப் சி மற்றும் டி) உள்ளூர் இளைஞர்களுக்கு 60% இடஒதுக்கீடு வழங்கப்படும். இளைஞர்களுக்கு மாதம் ரூ. 10,000 உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி வாய்ப்புகள் உருவாக்கப்படும். மீன்பிடித் தடைகால நிவாரணம் ரூ. 8,000-லிருந்து ரூ. 12,000-ஆக உயர்த்தப்படும். விவசாயிகளுக்கு பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 9,000 கிடைப்பது உறுதி செய்யப்படும். சென்னை மற்றும் புதுச்சேரி இடையே ‘வந்தே மெட்ரோ’ ரயில் இயக்கப்படும். புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு “மகாகவி பாரதியார்” பெயர் சூட்டப்படும். காரைக்காலில் இருந்து திருநள்ளாறுக்கு இலவச மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும். புதுச்சேரி முழுவதும் 30 இடங்களில் மலிவு விலையில் உணவு வழங்க ‘அடல் உணவகங்கள்’ திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: “வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட கருணாநிதி?”.. ஆ.ராசா ஆடியோ விவகாரத்தை கையில் எடுத்த இபிஎஸ்.. அதிமுக ஆட்சியில் செக்!

மக்கள் மனதை வெல்லப்போவது யார்?

காங்கிரஸ் இலவசக் கல்வி மற்றும் மாநில அந்தஸ்தை முதன்மைப்படுத்துகிறது; அதே சமயம் பாஜக உள்கட்டமைப்பு, மகளிர் மேம்பாடு மற்றும் நேரடிச் சலுகைகளை முன்னிறுத்துகிறது. புதிதாக வந்த தவெகவோ இரண்டு கட்சிகளுக்கு சமமாக, மாநில அந்தஸ்து, வேலைவாய்ப்பு, மருத்துவ காப்பீடு என கண்கவர் வாக்குறுதிகளை அளித்துள்ளது. இந்த வாக்குறுதிகளில் எது புதுச்சேரி மக்களின் மனதை வெல்லப்போகிறது என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும்.

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்