“சௌமியா அன்புமணியை எதிர்க்க அழுத்தம்”.. திமுக மீது வேல்முருகன் பகிரங்க குற்றச்சாட்டு!!
Tamilnadu Assembly Election: "ஒரு சீட்டுக்காக திமுக அல்லது அதிமுக அலுவலகத்தில் போய் நிற்பதைக் காட்டிலும், தன்மானத்தோடு தனித்து நின்று போராடி மடிவதே மேல்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார். தனக்கு ஒரு சீட்டு கிடைக்கவில்லை என்றாலும் கவலையில்லை என்றும், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதே தனது அடுத்தகட்டப் பணி என்றும் கூறினார்.

வேல்முருகன்
Tamilnadu Polls 2026: திமுக கூட்டணியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறியது. இந்நிலையில், அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், திமுகவில் நிலவிய அதிருப்தி குறித்தும், திமுகவின் வியூகங்கள் குறித்து வெளிப்படையான சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதன்படி, திமுகவில் நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை மேற்கோள் காட்டிய அவர், “பண்ருட்டி தொகுதியை இடமாக பார்க்க வேண்டாம், அது ஒரு எம்எல்ஏ பதவி என்று முதலமைச்சர் கூறியதாகத் தெரிவித்தார். மேலும், அதற்குப் பதிலளித்த அவர், தான் மீண்டும் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக கட்சி நடத்தவில்லை என்றும், தனது தொண்டர்களைப் பல்வேறு நிலைகளில் அதிகாரத்திற்கு கொண்டு வருவதே தனது நோக்கம் என்றும் கூறினார்.
இதையும் படிக்க: தேர்தலில் போட்டியிடாதது ஏன்.. மே 4ஆம் தேதி பின் தெரிவிக்கிறேன்- அண்ணாமலை பகீர் பேட்டி..
சௌமியா அன்புமணியை எதிர்க்க அழுத்தம்:
ஒரு மூத்த அமைச்சர் தன்னைத் தொடர்புகொண்டு, பாமகவின் சௌமியா அன்புமணி போட்டியிடும் இடத்தில் அவருக்கு எதிராகப் போட்டியிட வேண்டும் என்று கூறியதாக வேல்முருகன் குற்றம் சாட்டினார். அண்ணன்-தம்பியாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே (பாமக மற்றும் தவாக) தேவையில்லாமல் சண்டையை மூட்டிவிடும் வேலையை திமுக பார்ப்பதாக அவர் அதிருப்தி தெரிவித்தார்.
சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் முயற்சிகள்:
கடலூர் மற்றும் வட மாவட்டங்களில் வன்னியர் மற்றும் பறையர் சமூகங்களுக்கு இடையே இருந்த மோதல்களைத் தானும், திருமாவளவனும் இணைந்து தடுத்து நிறுத்தி, ஒரு அமைதியான சூழலை உருவாக்கியுள்ளதாகக் கூறினார். ஆனால், பண்ருட்டி தொகுதியைத் தன்னிடம் இருந்து பறித்து விடுதலை சிறுத்தைகளுக்குக் கொடுப்பதன் மூலம், இரு சமூகங்களுக்கு இடையே மீண்டும் ஒரு மோதலை உருவாக்க திமுக திட்டமிடுகிறதோ என்று கேள்வி எழுப்பினார்.
தன்மானம் மற்றும் சுயமரியாதை:
“ஒரு சீட்டுக்காக திமுக அல்லது அதிமுக அலுவலகத்தில் போய் நிற்பதைக் காட்டிலும், தன்மானத்தோடு தனித்து நின்று போராடி மடிவதே மேல்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். தனக்கு ஒரு சீட்டு கிடைக்கவில்லை என்றாலும் கவலையில்லை என்றும், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதே தனது அடுத்தகட்டப் பணி என்றும் கூறினார்.
இதையும் படிக்க: 4ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டா சசிகலா.. 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றம்..
24 மணி நேர காலக்கெடு:
தான் இந்தத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிடுகிறேனா அல்லது தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து கட்சிப் பணிகளில் ஈடுபடுகிறேனா என்பதை அடுத்த 24 மணி நேரத்தில் அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்தார். ஒருவேளை தான் போட்டியிடாவிட்டாலும், கட்சி யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ அவருக்குத் தொண்டர்கள் முழு ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.