உள்ளம் தேடி இல்லம் நாடி – பிரேமலதா விஜயகாந்தின் சுற்றுப்பயணம்..
DMDK Premalatha Vijayakanth Campaign: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேமுதிக தரப்பில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகஸ்ட் 3, 2025 அன்று முதல் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பெயரில் மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம்
சென்னை, ஆகஸ்ட் 4, 2025: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் தேமுதிக தரப்பில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகஸ்ட் 3, 2025 தேதியான நேற்று முதல் சுற்று பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தை கோயம்பேட்டில் இருக்கக்கூடிய மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவு இடத்திலிருந்து வணங்கி தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஏழு மாத காலங்களில் இருக்கிறது இந்த நிலையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களை சந்திக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஆளும் திமுக அரசு ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதே சமயம் தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
சூடு பிடிக்கும் அரசியல் களம்:
மேலும் பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாள் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தேமுதிக உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பெயரில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான சுற்றுப்பயணத்தை பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் தொடங்கினார்.
மேலும் படிக்க: மாடு மேய்த்து சீமான் போராட்டம்.. வனத்துறையினருடன் தள்ளுமுள்ளு.. தேனியில் பரபரப்பு!
இந்த சுற்றுப்பயணம் ஆனது இரண்டு பெயர்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பெயரில் பூத் கமிட்டி ஏஜென்ட்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதே போல் கேப்டனின் ரத யாத்திரை என்ற பெயரில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரேமலதா விஜயகாந்தின் சுற்றுப்பயணம்:
சவால்கள் வந்தாலும், சோர்வில்லா முயற்சி தான் வெற்றியை தரும்!
இன்று (03-08-2025) திருவள்ளூர் கிழக்கு, கும்மிடிப்பூண்டி ஆரப்பாக்கம் பிள்ளையார் கோவில் தொகுதி முழுவதும் மக்களை சந்தித்தேன்!
தேமுதிக வெற்றி பயணம்!#உள்ளம்தேடி_இல்லம்நாடி | #UllamThedi_IllamNaadi | #புரட்சி_அண்ணியார் |… pic.twitter.com/3w3rkPQkrT
— Premallatha Vijayakant (@PremallathaDmdk) August 3, 2025
தேமுதிக தரப்பில் 2026 ஜனவரி மாதம் நடைபெறக்கூடிய அக்கட்சியின் மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேமுதிக பலத்தை காட்டும் வகையில் இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று அதாவது ஆகஸ்ட் 4 2025 தேதி ஆன இன்று காலை 10 மணியளவில் சென்னை ஆவடி தொகுதிக்குட்பட்ட பகுதியில் பூத் கமிட்டி ஏஜென்ட்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: ‘கூட்டணி குறித்து பேசினால் ஒழுங்கு நடவடிக்கை’ ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் உத்தரவு!
அதேபோல் மாலை 4 மணி அளவில் திருத்தணியில் மக்களை சந்திக்கிறார். ஆகஸ்ட் 5 2025 தேதியான நாளை மறுநாள் காலை 10 மணிக்கு காஞ்சிபுரத்தில் பூத் கமிட்டிகள் தொடர்பான ஆலோசனை கூட்டமும், மாலை 5 மணி அளவில் ராணிப்பேட்டை தொகுதி சோழிங்கர் உட்பட்ட பகுதிகளில் மக்களை சந்திக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.