சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. பெரம்பூர் தொகுதிக்கு 25 வாக்குறுதிகள்.. திலகபாமா அதிரடி..

இந்த சட்டமன்றத் தொகுதியை பொருத்தவரையில், திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் திலகபாமா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். வரவிருக்கும் தேர்தலில் இந்த வேட்பாளர்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தொடர்ந்து அந்த பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் மக்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கக்கூடியவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. பெரம்பூர் தொகுதிக்கு 25 வாக்குறுதிகள்.. திலகபாமா அதிரடி..

கோப்ப் புகைப்படம்

Published: 

06 Apr 2026 17:43 PM

 IST

சென்னை, ஏப்ரல் 6, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள சூழலில், தேர்தல் பரபரப்பு அதிகரித்து வருகிறது. முக்கியமாக, ஏப்ரல் 6ஆம் தேதியான இன்று தான் வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனு தாக்கலை நிறைவு செய்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் வேட்பாளர்கள் அனைவரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் முக்கியமாக கவனிக்கப்படும் தொகுதி என்றால் அது பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தான். ஏனெனில்  தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி:

இந்த சட்டமன்றத் தொகுதியை பொருத்தவரையில், திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் திலகபாமா உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். வரவிருக்கும் தேர்தலில் இந்த வேட்பாளர்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

தொடர்ந்து அந்த பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் மக்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கக்கூடியவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

திலகபாமா வெளியிட்ட வாக்குறுதிகள்:

அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் போட்டியிடும் திலகபாமா கிட்டத்தட்ட 25 வாக்குறுதிகளை அளித்துள்ளார். அவற்றில் முக்கியமானவை:

  • பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குதல்
  • தண்ணீர் தேங்கும் இடங்களில் வடிகால் வசதி அமைத்தல்
  • கழிவுநீர் பிரச்சனையை தீர்க்க தனி கால்வாய் அமைத்தல்
  • குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, சுத்தமான குடிநீர் வழங்குதல்
  • பயோ மைனிங் முறையில் கொடுங்கையூர் குப்பை மேட்டைக் கழித்தல்
  • அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி மேம்படுத்தல் மற்றும் “குப்பை இல்லா தெருக்கள்” திட்டம்
  • கேப்டன் காட்டன் கால்வாய் மற்றும் வடக்கு–தெற்கு கால்வாய்களை தூர்வாருதல்
  • 24 மணி நேர அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைத்தல்
  • மெட்ரோ மற்றும் மினி பஸ் இணைப்பு வசதி உருவாக்குதல்

மேலும் படிக்க: கோவையில் அமைந்திருக்கும் சிங்காநல்லூர் தொகுதி.. திமுக vs அதிமுக.. யாருக்கு வெற்றி வாய்ப்பு?

இதேபோல், மற்ற அனைத்து கட்சி வேட்பாளர்களும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். மேலும், இந்த பகுதியில் திலகபாமா முதல் முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்