ஜனநாயக முறையில் விவாதிப்பதற்காக காத்திருக்கிறேன் – அன்புமணி தலைமையில் இன்று நடக்கும் பொதுக்குழு கூட்டம்..
PMK General Committee Meeting: அன்புமணி தரப்பில் நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று (ஆகஸ்ட் 9, 2025) அன்று மாமல்லப்புரத்தில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஆகஸ்ட் 9, 2025: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் இன்று அதாவது ஆகஸ்ட் 9 2025 தேதியான இன்று, மாமல்லபுரத்தில் இருக்கக்கூடிய கான்ப்ளூயன்ஸ் அரங்கில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 1 2025 அன்று வெளியிடப்பட்டது. இதற்கு இடையில் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் வருகின்ற ஆகஸ்ட் 17 2025 அன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராமதாஸ் தரப்பில் அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அன்புமணி நடத்தும் பொதுக்குழுவிற்கு தடையில்லை:
இந்த வழக்கானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரையும் தனது அறைக்கு அழைப்பு விடுத்து தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அன்புமணி தரப்பில் நடத்தப்படும் பொதுக்குழுவுக்கு தடை இல்லை என உத்தரவிட்டு ராமதாஸ் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும் படிக்க: அன்புமணி தலைமையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி – நீதிமன்றம் உத்தரவு
அன்புமணிக்கு சாதகமாக அமையும் முடிவுகள்:
பாமக கட்சியை பொறுத்தவரையில் அன்புமணிக்கு அதிகார வாய்ப்புகள் சற்று கூடுதலாக இருக்கிறது. உதாரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பாமகவிற்கு மாம்பழச்சினம் ஒதுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் அன்புமணிக்கு அழைப்பு வந்திருந்தது. அதேபோல் பாமக தலைமை அலுவலகமாக அன்புமணி நடத்தும் பாமக அலுவலகம் மாமல்லபுரத்தில் இருக்கக்கூடிய அலுவலகம் அதிகாரப்பூர்வ அலுவலகமாக சேர்க்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்த பொதுக்குழு நடத்த தடை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாமல்லப்புரத்தில் நடக்கும் பொதுக்குழு கூட்டம்:
தலைமை நிலைய செய்தி
நாளைய பொதுக்குழுவுக்கு தடையில்லை:
வாருங்கள் சொந்தங்களே…. பா.ம.க. வளர்ச்சி குறித்து விவாதித்து முடிவெடுப்போம்!பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அழைப்பு
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுக்குழுக்…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) August 8, 2025
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் காலை 11 மணி அளவில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும் படியும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவரையும் சந்தித்து ஜனநாயக முறையில் விபாவதிப்பதற்காக காத்திருப்பதாக அன்புமணி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் ஆகஸ்ட் 9 2025 ஆம் தேதியன்று நடைபெறும் பொது குழுவில் முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் தேர்தலை சந்திப்பதற்கான நடவடிக்கைகள் கள நிலவரம் சுற்றுப்பயணம் விவகாரம் உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வழியாக உள்ளது.