அண்ணா பல்கலை. ஸ்ட்ராங் ரூமில் “ஜனநாயகன் ஷோ”.. அதிரடியில் இறங்கிய போலீசார்!

Strong Room Jana Nayagan Movie: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் ஜனநாயகன் படம் பார்த்ததை சமூக வலைதலங்களில் பதிவிட்ட சிசிடிவி கேமரா ஊழியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலை. ஸ்ட்ராங் ரூமில் ஜனநாயகன் ஷோ.. அதிரடியில் இறங்கிய போலீசார்!

ஸ்ட்ராங் ரூமில் ஜனநாயகன் படம் பார்த்தவர் கைது

Published: 

28 Apr 2026 10:15 AM

 IST

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், அறையின் உள்ளே 24 மணி நேரமும் செயல்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதே போல, சென்னை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த அறைக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, தமிழ்நாடு போலீஸ், மத்திய பாதுகாப்பு படை என 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ட்ராங் ரூமில் ஓடிய ஜனநாயகன் படம்

இந்த கண்காணிப்பு கேமராக்களை கையாளுவதற்கு தனியாக ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஸ்ட்ராங் ரூமின் உள்ளே பணியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு ஊழியரான ஒருவர் தனது லேப் டாப்பில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன்படத்தை திருட்டுத்தனமாக பார்த்ததாக கூறப்படுகிறது. மேலும், அதனை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “ஓட்டு பெட்டி வர்ற இடத்துல கூட நம்ம தளபதி என்ட்ரி தான்” என்ற வாசகத்தை குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க: NLC ஊழல் விவகாரம்.. ரூ.422 கோடி முறைகேடு புகாரில் சிபிஐ அதிரடி விசாரணை.. சிக்கும் முக்கிய அதிகாரிகள்?

சமூக வலைதளங்களில் வைரலான பதிவு

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த பதிவு காவல்துறை மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோரின் கவனத்திற்கு சென்றது. பின்னர், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவுறுத்தல் வழங்கினார். அதன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், அண்ணா பல்கலைக்கழக ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமரா கண்காணிப்பாளரான யுவராஜ் என்பது தெரியவந்தது.

ஸ்ட்ராங் ரூம் கேமரா ஊழியர் அதிரடி கைது

இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் பேரில், கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து யுவராஜ் என்ற இளைஞரை கைது செய்தனர். ஏற்கனவே, வாக்குப்பதிவு நாளில் தமிழக வெற்றி கழகத்தின் சின்னத்துக்கு வாக்களித்ததை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் திருட்டுத்தனமாக ஜனநாயகன் படத்தை பார்த்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க: குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு.. மது போதையில் அடிக்கடி தகராறு.. மன வேதனையில் மகனை கொன்ற தாய்!

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?