திமுகவிடம் காங்கிரஸ் தொகுதிகள் பட்டியல் அளிப்பு… 3 நாள்களில் சுமூக முடிவு… கிரிஷ் சோடங்கர் தகவல்!

DMK Congress Seat Sharing : திமுக தலைமையிடம் காங்கிரஸ் கோரும் தொகுதிகள் அடங்கிய பட்டில் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அடுத்து வரும் 3 நாள்களில் சமூக முடிவு எட்டப்படும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார் .

திமுகவிடம் காங்கிரஸ் தொகுதிகள் பட்டியல் அளிப்பு... 3 நாள்களில் சுமூக முடிவு... கிரிஷ் சோடங்கர் தகவல்!

திமுகவிடம் தொகுதி பங்கீடு பட்டியல் அளிப்பு

Updated On: 

28 Feb 2026 13:43 PM

 IST

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு எம். பி. தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன், தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட குழுவினர் இன்று சனிக்கிழமை ( பிப்ரவரி 28) தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் அடங்கிய பட்டியல் திமுக தலைமையிடம் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தமிழகத்தில் போட்டியிடவில்லை. அவர் கர்நாடகத்தில் மட்டுமே போட்டியிடுவார். திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக 2 நாட்களில் தெளிவான முடிவு எடுக்கப்படும். 2 நாட்களுக்குப் பிறகு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு அதற்கான படிவங்களில் கையெழுத்து இடப்படும் என்று கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்துடன் பேச்சுவார்த்தையா

அப்போது, தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அப்போது, திமுக தலைமை அலுவலகத்தில் இருந்து கொண்டு, தமிழக வெற்றி கழகம் குறித்து எப்படி பேச முடியும் என்று கிரிஷ் சோடங்கர் தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றார். இதே போல, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களது தேவை குறித்து திமுக தலைமை இடம் கூறியுள்ளோம். அது தொடர்பாக பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: “அரசியலுக்கு வந்தால் தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டுவார்கள்”.. விஜய் குறித்து அண்ணாமலை பேச்சு!!

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட்

ராஜ்ய சபா சீட்டு தருவதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பது தொடர்பாக நாங்கள் கையெழுத்திடும்போது, தெரிவிப்போம். திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை வெற்றிகரமாகவும், சுமூகமாகவும் சென்று கொண்டிருக்கிறது. இதில் எந்த விதமான பிரச்சினையும் கிடையாது. எனவே, தேவையில்லாத உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்ப வேண்டாம்.

கிரிஷ் சோடங்கர் கூட்டணி விவகாரம் தொடர்பாக பேசவில்லை

இந்த கூட்டணியானது தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்றும் கூட்டணியாகும். தமிழகத்தில் ஒரு போதும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடம் கிடையாது. மதவாத சக்திகளை விரட்டும் கூட்டணியாக எங்கள் கூட்டணி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் எந்த இடத்திலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசவில்லை. இது தவறான தகவல் ஆகும். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் மட்டுமே கூட்டணி என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: NDA கூட்டணியில் ஒட்டாத அதிமுக – அமமுக உறவு?.. பகையை மறக்காத தலைவர்கள்? ஆதங்கத்தில் நிர்வாகிகள்..

Follow Us
குதிரை மேல் வந்து டெலிவரி செய்த ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. இணையத்தில் வைரல் காட்சிகள்..
நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
11 மாத குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ஒன்றிணைந்த மக்கள்
செயல்படாத EPF கணக்குகள்.. தொழிலாளர் அமைச்சகம் முக்கிய முடிவு..