வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் ரத்து.. ஏமாற்றத்தில் மக்கள்..

அப்போது பேசிய விஜய், “இது வெறும் தேர்தல் அல்ல; ஒரு தலைமுறைக்கான மாற்றம். அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை செய்ய வேண்டும். ஊரில் வாக்குரிமை இருந்தாலும், தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டும். விசில் சின்னத்திற்கு நேராக இருக்கும் பட்டனை அழுத்த வேண்டும்” என்று கூறியதுடன், திமுக அரசை விமர்சித்தும் பேசினார்.

வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் ரத்து.. ஏமாற்றத்தில் மக்கள்..

கோப்பு புகைப்படம்

Published: 

30 Mar 2026 17:03 PM

 IST

சென்னை, மார்ச் 30, 2026: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று காலை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.  தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரச்சாரம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தொடங்க இருந்த நிலையில், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் அனுமதி மறுக்கப்பட்டது. அதிக அளவில் மக்கள் கூடும் வாய்ப்பு இருப்பதால், அந்த இடம் பாதுகாப்பு தரப்பில் பொருத்தமற்றது எனக் கூறி காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.

நெருங்கும் தேர்தல் – விஜய் பிரச்சாரம்:

இதனைத் தொடர்ந்து, விஜய் தலைமைச் செயலகத்துக்கு சென்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்டநாயகியை சந்தித்து மனு அளித்தார். அதில், பிரச்சாரத்திற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்றும், திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னர், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஒரு நாளில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள் – விஜய்:

இந்த நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள சூழலில், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் காலை 11 மணி அளவில் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார்.

 மேலும் படிக்க: புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் இருக்கும் மின் தூக்கியில் சிக்கிய 17 பேர்.. 2 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு..

அப்போது பேசிய விஜய், “இது வெறும் தேர்தல் அல்ல; ஒரு தலைமுறைக்கான மாற்றம். அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை செய்ய வேண்டும். ஊரில் வாக்குரிமை இருந்தாலும், தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வேண்டும். விசில் சின்னத்திற்கு நேராக இருக்கும் பட்டனை அழுத்த வேண்டும்” என்று கூறியதுடன், திமுக அரசை விமர்சித்தும் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், அங்கு அதிகமான மக்கள் கூடிவிட்டதால், காவல்துறையின் அறிவுரையை ஏற்று இரண்டு நிமிடங்கள் மட்டுமே விஜய் பேசினார். பின்னர் பிரச்சாரம் நிறுத்தப்பட்டது.

கூட்ட நெரிசல் ஏற்பட்ட காரணத்தால், காவல்துறை அனுமதி வழங்கிய இடத்திற்கு சுமார் 100 மீட்டர் முன்பே விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில், காவல்துறையின் அறிவுரையை ஏற்று அவர் குறுகிய நேரம் மட்டுமே உரையாற்றினார்.

வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து:

பெரம்பூர் மற்றும் கொளத்தூரைத் தொடர்ந்து, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. அங்கு தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஆதவ் அர்ஜூனாவை ஆதரித்து விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார்.

ஆனால், அந்த பிரச்சாரம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் பூக்கடை குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொளத்தூரில் விஜய்க்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை; அதனால் வில்லிவாக்கம் பிரச்சாரம் ரத்து செய்யப்படுகிறது. வில்லிவாக்கம் தொகுதியில் பின்னர் தனியாக மற்றொரு நாளில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..