யார் வந்தாலும் திமுக கூட்டணியை வெல்ல முடியாது.. 234 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் – திமுக தலைவர் ஸ்டாலின்..
இந்த நிலையில், ஏப்ரல் 11ஆம் தேதி இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். காலை நடைப்பயணம் மேற்கொண்டு, இலுப்பூர் மற்றும் அன்னவாசல் பகுதிகளில் மக்களிடம் வாக்கு சேகரித்தார். விராலிமலை தொகுதி திமுக வேட்பாளர் செல்ல பாண்டியனை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்தார்.

கோப்பு புகைப்படம்
புதுக்கோட்டை, ஏப்ரல் 11, 2026: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் யார் என்ன செய்தாலும் திமுக கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு, தங்களது தொகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
Follow Us