திடீரென மேம்பாலம் முன் விழுந்து வணங்கிய பிரேமலதா விஜயகாந்த்.. என்ன காரணம்?
Premalatha Vijayakanth: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பெயரில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் ரிஷிவந்த்யம் தொகுதியில் மறைந்த முன்னாள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எம்.எல்.ஏவாக இருந்த போது கட்டப்பட்ட மேம்பாலம் முன் வணங்கினார்.

மேம்பாலம் முன் விழுந்து வணங்கிய பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த், ஆகஸ்ட் 14, 2025: 2026 சட்டமன்றத் தேர்தல் நடக்க இன்னும் 7 மாத காலங்களே இருக்கக்கூடிய நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதில் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 13 2025 தேதியான நேற்று ரிஷிவந்தியம் தொகுதி மக்களை காண சென்றிருந்தார். அப்போது மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எம்.எல்.ஏவாக இருக்கும்போது கட்டப்பட்ட மேம்பாலத்தின் முன்பு விழுந்து வணங்கினார் பிரேமலதா விஜயகாந்த். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் அனைத்து கட்சிகள் தரப்பிலும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேமுதிக தரப்பிலும் பிரேமலதா விஜயகாந்த் மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த சுற்றுப்பயணம் ஆனது ஆகஸ்ட் 3 2025 தேதியன்று தொடங்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் 2026 ஜனவரி மாதம் நடைபெறக்கூடிய கட்சியின் மாநில மாநாட்டில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 207 அரசு பள்ளிகள் மூடல்.. பதிலளிக்குமா பள்ளி கல்வித்துறை – எடப்பாடி பழனிசாமி கேள்வி..
உள்ளம் தேடி இல்லம் நாடி:
வெற்றிக்கான பாதையில் சோர்வை விட மனஉறுதியை ஏந்திக்கொள்!
பயத்தை கடந்து நடந்த காலடிதான் வெற்றியின் முதல் ஒலி!#உள்ளம்தேடி_இல்லம்நாடி | #UllamThedi_IllamNaadi | #புரட்சி_அண்ணியார் | #DMDK | #Dmdkparty | #DMDKITWING | #CaptainVijayakanth #premalathavijayakanth pic.twitter.com/U4KlTGbSKZ
— Premallatha Vijayakant (@PremallathaDmdk) August 13, 2025
பிரேமலதா விஜயகாந்தின் சுற்றுப்பயணம் இரண்டு பெயர்களில் நடத்தப்பட்டு வருகிறது. உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பெயரில் பூத் கமிட்டி ஏஜென்ட்கள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதேப்போல் கேப்டனின் ரத யாத்திரை என்ற பெயரில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தேமுதிகவின் மறைந்த தலைவர் விஜயகாந்த் இல்லாமல் அந்த கட்சி சந்திக்க கூடிய முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். இதனால் தேமுதிகவின் பலத்தை காட்டும் வகையில் இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இனி இரவில் ரயிலில் நிம்மதியாக பயணிக்கலாம் – வெளியான சூப்பர் அறிவிப்பு
மேம்பாலம் முன் விழுந்து வணங்கிய பிரேமலதா விஜயகாந்த்:
இதில் மாவட்டம் தோறும் சென்று பிரேமலதா விஜயகாந்த் மக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். அந்த வகையில் ஆகஸ்ட் 13 2025 தேதியான நேற்று ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கட்டப்பட்ட மேம்பாலத்தின் முன்பு அவர் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். அவர் வணங்கும் போது அருகில் முன்னாள் தலைவர் விஜயகாந்த் புகைப்படமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 2026 சட்டமன்ற தொகுதியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் விருத்தாச்சலம் பகுதியில் போட்டியிட போவதாக விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.