”கம்யூனிஸ்ட் கட்சி பற்றி எடப்பாடி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை” – சி.பி.ஐ.(எம்) மாநில செயலாளர் சண்முகம்
CPIM State Secretary Shanmugam: எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் கொள்கை இழந்துள்ளதாகவும், வரும் தேர்தலில் காணாமல் போய்விடும் என பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், கம்யூனிஸ்ட் கட்சி பற்றி எடப்பாடி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

சண்முகம் - எடப்பாடி பழனிசாமி
சென்னை, ஆகஸ்ட் 9, 2025: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார பயணத்தின் போது கம்யூனிஸ்ட் கட்சிகள் காணாமல் போய்விட்டதாகவும் கடந்த 50 மாதங்களில் ஆளும் திமுக அரசை எதிர்த்து ஒரு அறிக்கை கூட விடுக்கவில்லை என குறிப்பிட்டு பேசியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கூறுகையில், “ தேர்தல் நடந்த பின்னர் அதிமுக காணாமல் போகிறதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காணாமல் போகிறதா என்பது தெரியும். அதிமுக பாரதிய ஜனதா கூட்டணியில் குழப்பமான சூழல் நிலவுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
நெருங்கும் 2026 சட்டமன்றப் தேர்தல்:
தேர்தல் நடைபெற இன்னும் ஏழு மாத காலங்களே இருக்கக்கூடிய நிலையில் அதிமுக தரப்பில் எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியிலும் கட்சி தரப்பிலும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராஜபாளையத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து உரையாற்றினார்.
மேலும் படிக்க: ஜனநாயக முறையில் விவாதிப்பதற்காக காத்திருக்கிறேன் – அன்புமணி தலைமையில் இன்று நடக்கும் பொதுக்குழு கூட்டம்..
கொள்கை இழந்த கம்யூனிஸ்ட் கட்சிகள்:
அப்போது பேசிய அவர், “ கொள்கையை இழந்ததால் கம்யூனிஸ்டுகள் மக்களிடம் செல்வாக்கு இழந்து விட்டனர். 50 மாதத்தில் ஒரு முறையாவது திமுகவை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிக்கை விட்டு இருக்கிறதா என கேள்வி எழுப்பு இருந்தார். அதேபோல் ஆணவ கொலை பற்றி பேச திமுக கூட்டணி தலைவர்க, முதல்வரிடம் அனுமதி கேட்கிறார்கள். திமுக கூட்டணி வலிமையாக இருக்கலாம் ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது மக்கள் தான் அந்த மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்” என குறிப்பிட்டு பேசியிருந்தார்.
மேலும் படிக்க: மழை ஒரு பக்கம்.. பொளக்கும் வெயில் ஒரு பக்கம்.. இன்றைய நிலவரம் என்ன?
கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி எடப்பாடி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை:
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசி இருந்தார். அப்போது பேசிய அவர், “ தேர்தலுக்கு பின்னர் கம்யூனிஸ்டுகள் காணாமல் போகிறதா அல்லது அதிமுக காணாமல் போகிறதா என்பது விரைவில் தெரியவரும். இதில் ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவதைப்போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி எடப்பாடி பழனிசாமி கவலைப்பட தேவையில்லை” என தெரிவித்துள்ளார். ’