தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போடக்கூடிய வாக்கு – தமிழக வளர்ச்சிக்கான தடைக்கல்.. முதல்வர் ஸ்டாலின்..

அடிமை அதிமுக, மதவாத பாஜகவிடமிருந்து தமிழ்நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும். தமிழக முழுவதும் தற்போது இந்த ஒரு பாடுதான் ஒலிக்கிறது — ‘என்கிட்ட மோதாதே, இது பெரியாரின் தமிழ்நாடடா; வம்புக்கு இழுக்காதே, இது அண்ணாவின் கோட்டையடா. நான் பறக்கவிட்ட கருப்புக்கொடி, காவிக்கொடியை வீழ்த்தி…’ போர் என்றால் வெற்றி ஒன்றுதான் குறி; நம் குறி தவறவில்லை. இதுதான் திமுக, தமிழ்நாடு, திராவிட மாடல்,” எனவும் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போடக்கூடிய வாக்கு - தமிழக வளர்ச்சிக்கான தடைக்கல்.. முதல்வர் ஸ்டாலின்..

கோப்பு புகைப்படம்

Published: 

18 Apr 2026 19:21 PM

 IST

ஏப்ரல் 18, 2026: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 21ஆம் தேதி முதல் பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர் சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாட்டில் பாஜக அதிமுக வேரோடு வீழ்த்தப்படும்:

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் உரிமைகளை காவு கொடுக்கத் துணிந்த எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு பதினொன்றாவது தோல்வியை கொடுக்க வேண்டும். வெகுமானத்திற்காக தன்மானத்தை இழந்து, இனமானத்திற்கு துரோகம் செய்கிற அடிமைக் கூட்டத்திற்கு தமிழ்நாடு சரியான பாடம் புகட்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பாஜகவும் அதிமுகவும் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும். வருவது எதற்காக? உரிமை தொகையை நிறுத்துவதற்காக, ‘விடியல் பயணம்’ திட்டத்தை முடக்குவதற்காக, ‘புதுமைப்பெண்’ போன்ற திட்டங்களை தடுப்பதற்காக, இடஒதுக்கீட்டை பறித்து சமூக நீதியை படுகுழியில் தள்ளுவதற்காக. இதைத்தான் ஏனைய கூட்டணி மாநிலங்களிலும் செய்து கொண்டிருக்கிறது.

தே.ஜ கூட்டணி – தமிழ்நாட்டிற்கான தடைக்கல்:

பாஜக மற்றும் அதிமுகவிற்கு அளிக்கப்படும் வாக்குகள் தமிழக முன்னேற்றத்திற்கு போடப்படும் தடைக்கற்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்,” எனக் கூறினார்.

அதேபோல், “அதிமுக போன்ற நாணயமற்ற கட்சியை யாரும் பார்த்ததில்லை. இந்த நாட்டுக்கு இரண்டகம் செய்கிறது அதிமுக. அடிமைகளிடம் மறுபடியும் தமிழ்நாடு சிக்கலாமா? சிக்கினால் தமிழ்நாடு, தமிழ்நாடு இருக்காது.

மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை எதிர்ப்பதன் மூலம் தமிழகத்தின் எம்.பிக்கள் எண்ணிக்கை குறையக்கூடும் – எடப்பாடி பழனிசாமி..

அடிமை அதிமுக, மதவாத பாஜகவிடமிருந்து தமிழ்நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும். தமிழக முழுவதும் தற்போது இந்த ஒரு பாடுதான் ஒலிக்கிறது — ‘என்கிட்ட மோதாதே, இது பெரியாரின் தமிழ்நாடடா; வம்புக்கு இழுக்காதே, இது அண்ணாவின் கோட்டையடா. நான் பறக்கவிட்ட கருப்புக்கொடி, காவிக்கொடியை வீழ்த்தி…’ போர் என்றால் வெற்றி ஒன்றுதான் குறி; நம் குறி தவறவில்லை. இதுதான் திமுக, தமிழ்நாடு, திராவிட மாடல்,” எனவும் தெரிவித்தார்.

திமுக சாதனைகளை சொல்ல தனி மாநாடு போட வேண்டும்:

அதே சமயத்தில், திருப்பூரில் திமுக செய்த சாதனைகளை மக்களிடம் பட்டியலிட்டு பேசினார். “நாம் வாக்கு கேட்டு செல்லும் இடங்களெல்லாம் மக்கள் நம் சாதனைகளை பட்டியலிட்டு சொல்கின்றனர். திமுகவின் திட்டங்கள் சாதனைகளாகவே இருக்கின்றன.

நம் திட்டங்களை காப்பியடிக்கின்றனர். நம் சாதனைகளை சொல்லி எனக்கே அசதியாகிவிட்டது; அதற்கு தனி மாநாடு போட வேண்டும். சொல்வதற்கு சாதனைகள் எதுவும் இல்லாத பழனிசாமி அசிங்கமாக பேசுகிறார், சாபம் விடுகிறார். அவருக்கு பதினொன்றாவது தோல்வியை கொடுக்க வேண்டும். துரோகம் செய்யும் கூட்டத்திற்கு பாடம் புகட்ட வேண்டும்,” எனப் பேசியுள்ளார்.

Follow Us
Related Stories
கடந்த 5 ஆண்டுகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் பலனை அனுபவிக்கிறார்கள் – பிரதமர் மோடி விமர்சனம்..
பிரச்சாரம் ரத்து – திமுக நெருக்கடி தருகிறது – விஜய் பரபரப்பு அறிக்கை
“திமுக பற்றவைத்த தீ நாடாளுமன்றம் வரை பரவியது”.. புது வரலாறு படைத்துள்ளோம்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!!
“தமிழ் மண், மொழி, கலாச்சாரத்தை ஆர்எஸ்எஸ், பாஜகவால் தொடக்கூட முடியாது”.. ராகுல் காந்தி கர்ஜனை!!
பெரம்பூர் – திருச்சி கிழக்கு தொகுதி.. EVM- இல் விஜய்யின் பெயர்- சின்னம் எங்கே இருக்கும் தெரியுமா?
ஓட்டு வீட்டில் இருந்த செங்கோட்டையனுக்கு பங்களா வீடு-கல்லூரி எப்படி வந்தது… எடப்பாடி கடும் விமர்சனம்!
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..