தேர்தல் நடத்தை விதிகளை மீறல்.. தவெக தலைவர் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு!

Case Filed On TVK Leader Vijay | தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், கையுடன் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளை மீறல்.. தவெக தலைவர் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு!

தவெக தலைவர் விஜய்

Published: 

31 Mar 2026 08:48 AM

 IST

சென்னை, மார்ச் 31 : தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தமிழக வெற்றிக் கழக (TVK – Tamilaga Vettri Kazhagam) தலைவர் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று (மார்ச் 30, 2026) வேட்புமனு தாக்கல் செய்த கையுடனே விஜய், தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நிலையில்,  தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தேர்தல் பிரசாரம் செய்த தவெக தலைவர் விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Election) இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று (மார்ச் 30, 2026) தொடங்கியது. வேட்புமனு தாக்கலின் முதல் நாளே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார். இந்த நிலையில், நேற்று பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த அவர், அங்கிருந்து பிரசார வாகனம் மூலம் கட்சி அலுவலகத்திற்கு சென்றார்.

இதையும் படிங்க : 5 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

விஜய் கட்சி அலுவலகத்திற்கு செல்லும் வழியில் அவருக்காக காத்திருந்த ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

5 பிரிவுகளின் கீழ் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

கொளத்தூரில் பரப்புரையின் போது விதிகளை மீறி செயல்பட்டதாக விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, 5 ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தேர்தல் அதிகாரியிடம் வழங்கிய உறுதிமொழியை மீறி 30 ஒலிப்பெருக்கிளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டதன் காரணமாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க : வாக்குப்பதிவுக்கு முன்பு கடைபிடிக்கப்படும் அமைதி நேரம் என்றால் என்ன? அதன் விதிகள் கூறுவது என்ன?

மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை கூட்டியதாகவும், ஆம்புலன் வாகனத்திற்கு வழிவிடாமல் இடையூறு செய்ததாகவும் தேர்தல் அதிகாரிகள் புகார் வழங்கிய நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..