எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கும் பொறுப்பு பாஜகவிற்கு உள்ளது – அண்ணாமலை..

Annamalai On Edappadi Palaniswami: நெல்லை மாவட்டத்தில் ஆகஸ்ட் 22, 2025 தேதியான இன்று பூத் கமிட்டி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பேசிய முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பாஜகவின் பொறுப்பு என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கும் பொறுப்பு பாஜகவிற்கு உள்ளது - அண்ணாமலை..

பாஜக பூத் கமிட்டி மாநாடு

Published: 

22 Aug 2025 18:35 PM

நெல்லை, ஆகஸ்ட் 22, 2025: நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்துள்ளார். இந்த மாநாட்டில் பேசிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, “எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பாஜகவின் கடமை” என தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக தரப்பில் தேர்தல் நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுகவைப் பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டம் தோறும் மக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார்.

தேர்தலை சந்திக்கும் அதிமுக – பாஜக:

2026 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக பாஜகவுடன் மீண்டும் கை கோர்த்து தேர்தலை சந்திக்க உள்ளது. கூட்டணியில் இருக்கும் பாஜக தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பி. எல். சந்தோஷ் தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம்-இல் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க: ”விஜய் எங்களுக்கு தம்பி, இந்த உறவு இப்போது உருவானது அல்ல” – பிரேமலதா விஜயகாந்த்..

எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைப்பது பாஜகவின் கடமை – அண்ணாமலை:


அதனைத் தொடர்ந்து, தற்போது நெல்லை மாவட்ட தச்சநல்லூர் பகுதியில் மண்டல பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்துள்ளார். அப்போது கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, “எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைப்பது பாஜகவினரின் கடமை மட்டுமல்ல, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒட்டுமொத்த பொறுப்பு ஆகும். இதற்காக அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக, தமிழக அரசுக்கு பெருமை சேர்த்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.