இபிஎஸ் கூட்டத்தில் மீண்டும் ஆளில்லாத ஆம்புலன்ஸ்.. விரட்டியடித்த தொண்டர்களால் பரபரப்பு

Edappadi K. Palaniswami Campaign: திருச்சி உறையூர் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்தின் போது, ஆம்புலன்ஸ் ஒன்று கூட்டத்திற்குள் நுழைந்தது. நோயாளிகள் இல்லாத அந்த ஆம்புலன்ஸை அதிமுக தொண்டர்கள் விரட்டியடித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, வேலூர் கூட்டத்திலும் இதேபோன்ற சம்பவம் நடைபெற்ற போது இபிஎஸ் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இபிஎஸ் கூட்டத்தில் மீண்டும் ஆளில்லாத ஆம்புலன்ஸ்.. விரட்டியடித்த தொண்டர்களால் பரபரப்பு

இபிஎஸ் கூட்டத்தில் ஆம்புலன்ஸ்

Updated On: 

25 Aug 2025 09:15 AM

திருச்சி, ஆகஸ்ட் 25: திருச்சி மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி (Edappadi K. Palaniswami) பேசும்போது கூட்டத்தின் உள்ளே ஆம்புலன்ஸ் புகுந்த நிலையில் அதனை அதிமுக (AIADMK) தொண்டர்கள் விரட்டியடித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு களப்பணிகளை ஆற்றி வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார். இப்படியான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் அவர் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

காலியாக வந்த ஆம்புலன்ஸ் – டென்ஷனான இபிஎஸ்

தமிழகத்தை காப்போம் மக்கள் உரிமைகளை மீட்போம் என்ற பெயரில் நடைபெற்ற அந்த பரப்புரையின்போது ஆம்புலன்ஸ் உள்ளே வந்தது. அப்போது அந்த ஆம்புலன்ஸில் நோயாளிகள் யாரும் இல்லை. பொதுவாக இதுபோன்ற அவசர ஊர்தி வாகனம் வரும்போது அதற்கு வழிவிட வேண்டும் என்பது சட்ட விதியாக உள்ளது. இப்படியான நிலையில் அந்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ்க்கு வழி விடப்பட்டது. ஆனால் அன்றைக்கு இபிஎஸ் பேச்சு கடும் புயலை கிளப்பியது.

Also Read: அமித்ஷாவிடம் அதிமுக அடமானம்.. EPSஐ சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!

நானும் என்னுடைய பல கூட்டங்களில் பார்த்து விட்டேன். ஆளில்லாத ஆம்புலன்ஸ்களை அனுப்பி திமுக தொல்லை கொடுத்து வருகிறது. இனியொரு முறை ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்தால் அதனை ஓட்டி வரும் நபர் நோயாளியாக செல்வார் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். இதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

மண்ணச்சநல்லூரில் மீண்டும் வந்த ஆம்புலன்ஸ்

இப்படியான நிலையில் திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக  மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு அவர் வருவதற்கு முன்பு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் கூடியிருந்தனர். இந்த நிலையில் அப்போது ஆம்புலன்ஸ் ஒன்று கூட்டத்தின் உள்ளே புகுந்தது. அதில் நோயாளிகள் யாரும் இல்லை. இதனைக் கண்ட தொண்டர்கள் ஆம்புலன்ஸை இந்த வழியாக விட முடியாது. திரும்பி செல் என கூறி அதனை ஓட்டி வந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Also Read:  மக்களின் நலன்! அமித்ஷாவின் வீட்டின் கதவை தட்டுவது தவறா..? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

இதனையடுத்து அதிமுக தொண்டர்களால் திருப்பி அனுப்பப்பட்ட ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்க அவசரமாக சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.