Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

TVK Vijay: 2026 சட்டமன்ற தேர்தல்.. விஜய் போடும் திட்டம்.. வெற்றியைக் கொடுக்குமா?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அரசியல் நுழைவு தொடங்கி கட்சி அமைப்பு, கூட்டணி வாய்ப்புகள் மற்றும் 2026 தேர்தலில் அவரது தாக்கம் ஆகியவை பற்றி நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக அரசியல் களத்தில் பேசப்பட்டு வருகிறது.

TVK Vijay: 2026 சட்டமன்ற தேர்தல்.. விஜய் போடும் திட்டம்.. வெற்றியைக் கொடுக்குமா?
தளபதி விஜய் Image Source: X
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 08 May 2025 18:56 PM

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு (2026 Tamil Nadu Assembly Election) இன்னும் சரியாக ஓராண்டு காலம் தான் இருக்கிறது. எட்டிப்பிடிக்கும் தூரத்தில் 12 மாதங்கள் வருகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு, திருப்புமுனை, எதிர்பாராத நிகழ்வுகளுடன் தான் இருக்கும். எந்த கட்சி எந்த கூட்டணியில் அமையும். எந்த கூட்டணி வியூகம் சரியாக மக்களை சென்றடையும். யாருடைய ஆதரவு யாருக்கு என்றெல்லாம் கட்டம் கட்டி பார்க்கும் அளவுக்கு தேர்தல் திருவிழா அமையும். அப்படியாக 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு என்கிற பட்டியலில் முதலிடத்தில் உள்ளது தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam). தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் (Thalapathy Vijay) நீண்ட காலமாக அரசியலில் மறைமுகமாகவே பயணப்பட்டு வருகிறார். அவர் நேரடியாக 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயரிட்டுள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் கட்சியின் கொள்கை தலைவர்களாக காமராசர், அம்பேத்கர், பெரியார், அஞ்சலை அம்மாள், வேலுநாச்சியார் ஆகியோரை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். கட்சியின் தொண்டர்களை இணைக்க செயலி அறிமுகம் செய்யப்பட்டதே மற்ற அரசியல் கட்சியினரிடையே பெரும் பேசுபொருளாக மாறியது.

விறுவிறு பணிகள்

அது மட்டுமல்லாமல் தற்போது நடித்து வரும் படம் மற்றும் இன்னொரு படம் ஆகிய இரண்டையும் முடித்துவிட்டு முழு நேர அரசியலுக்கு வருவதற்கு சினிமாவில் இருந்து விலகுவதாகவும் தடாலடியாக அறிவித்திருந்தார். இந்த இரண்டு அறிவிப்புகளும் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. சரியாக 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில் விஜய் அரசியல் கட்சி தொடங்கி தனது பயணத்தை மிக மெதுவாகவும் நிதானமாகவும் எடுத்து வைத்தார்.

ஆரம்பத்தில் வழக்கமான அரசியல் தலைவர்கள் போல சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்த அவரை இணையவாசிகளும் சக அரசியல்வாதிகளும் கடுமையாக ட்ரோல் செய்தனர். வொர்க் ப்ரம் ஹோம் முறையில் விஜய் அரசியல் செய்வதாக நகையாடினர். ஆனால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண விஷயத்தில் நேரடியாகவே தமிழ்நாடு அரசை கண்டித்தார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து 2024 ஆகஸ்ட் 24 ஆம் தேதி கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். அதிலும் ஸ்பெயின் நாட்டு கொடியை காப்பியடித்ததாக கிண்டல் செய்யப்பட்டது. 2024 அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே முதல் மாநில மாநாடு நடத்தி அசத்தினார் விஜய். இந்த மாநாட்டில் திமுகவை அரசியல் ரீதியாக எதிரி, பாஜகவை கொள்கை ரீதியாக எதிரி என வெளிப்படையாக தெரிவித்தார்.

அதிமுகவை சீண்டாத விஜய்

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திமுக கூட்டணி குறித்து பேசி அதிர வைத்தார். ஆனால் எந்த இடத்திலும் கடந்த 14 மாத அரசியல் பயணத்தில் அதிமுகவை சீண்டாமல் விஜய் இருப்பது பலத்த சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியா என்ற கேள்வியெல்லாம் எழுகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் தெரிவித்திருப்பது பிற கட்சிகளையும் ஒன்றிணைக்கும் தாரக மந்திரமாக அமைந்திருக்கிறது.

ஆனால் தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய கட்சியான அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைய விரும்பும். மாறாக, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் கூட்டணி அமையும் என கூறப்படுவதால் கண்டிப்பாக இதற்கு அதிமுக மட்டுமல்ல பிற முக்கிய கட்சிகளும் சம்மதிக்குமா என்பது சந்தேகம் தான். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் உறுதியாக இருப்பதாக சொல்கிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தேர்தல் வரும்போது சொல்வோம் என தெரிவிக்கின்றன.

விஜய் கூட்டணிக்கு கண்டிப்பாக கடைசி நேரத்தில் பெரிய ஆதரவு இருக்கும் என நம்பப்படுகிறது. அதை நம்பியே விஜய்யின் அரசியல் பயணமும் இருக்கிறது.

விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாரா?

அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர்,ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன், திருமாவளவன், டாக்டர் ராமதாஸ் போன்ற தமிழ்நாடு அரசியல் தலைவர்களுக்கு எல்லாம் முதல் தேர்தல் என்ற ஒன்று இருந்திருக்கும். அது வெற்றி, தோல்வி என்பதெல்லாம் வேறு. ஆனால் அரசியலைப் பொறுத்தவரை களத்தில் இறங்கி சண்டை செய்தால் தான் கவனிக்கப்படுவோம். அரசியல் எல்லாருக்கும் சுலபமாக அமையாது. எம்ஜிஆர் தனது முதல் தேர்தலில் அபார வெற்றி பெற்றார். ஆனால் விஜயகாந்த் கட்சி தொடங்கி தனது முதல் தேர்தலில் அவர் மட்டுமே வென்று தனி எம்.எல்.ஏ.வாக சட்டசபை சென்றார்.

விஜய்க்கு 2026 ஆம் ஆண்டு தேர்தல் எப்படி இருக்கப் போகிறது என்பதெல்லாம் தெரியாது. அதேசமயம் தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமம் வரை அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜயகாந்துக்கு வாய்ப்பளிக்காமல் போய்விட்டோமே என இன்றைக்கும் வருத்தப்படும் மக்கள் விஜய்யை அவ்வளவு எளிதில் கைவிட்டு விட மாட்டார்கள். கண்டிப்பாக விஜய் தமிழ்நாட்டை ஆள சில ஆண்டுகள் ஆகலாம், இல்லாமலும் போகலாம். ஆனால் தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் ஒரு மாற்றத்தை உண்டாக்கும் என அரசியல் வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே ஒருவரின் திறமை என்பது வெளிப்படும். மக்கள் அந்த வாய்ப்பை தருவார்கள் என விஜய் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

விர்ச்சுவல் கிரெடிட் கார்டால் கிடைக்கும் 7 நன்மைகள்
விர்ச்சுவல் கிரெடிட் கார்டால் கிடைக்கும் 7 நன்மைகள்...
ரோஹித், கோலிக்கு மாற்று யார்? இந்திய அணி எப்படி இருக்கும்..?
ரோஹித், கோலிக்கு மாற்று யார்? இந்திய அணி எப்படி இருக்கும்..?...
ராகவா லாரன்ஸின் பென்ஸ் படப் பூஜையில் சிவகார்த்திகேயன்!
ராகவா லாரன்ஸின் பென்ஸ் படப் பூஜையில் சிவகார்த்திகேயன்!...
கோடையில் அதிக வெப்பத்தால் விரைவில் வயது முதிர்வு ஏற்படும்?
கோடையில் அதிக வெப்பத்தால் விரைவில் வயது முதிர்வு ஏற்படும்?...
ரயிலின் கழிப்பறையில் பாம்பு.. அசால்டாக பிடித்த ரயில்வே அதிகாரி!
ரயிலின் கழிப்பறையில் பாம்பு.. அசால்டாக பிடித்த ரயில்வே அதிகாரி!...
அடிக்கடி ஹை ஹீல்ஸ் போடுவீங்களா... உஷார்!
அடிக்கடி ஹை ஹீல்ஸ் போடுவீங்களா... உஷார்!...
குரு பெயர்ச்சி 2025: செம லக்! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்
குரு பெயர்ச்சி 2025: செம லக்! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்...
அதிமுக ஆட்சியில் பாதுகாக்க நினைத்தவர்களுக்கு தண்டனை - கனிமொழி
அதிமுக ஆட்சியில் பாதுகாக்க நினைத்தவர்களுக்கு தண்டனை - கனிமொழி...
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ்!
இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ் 25 எட்ஜ்!...
ரூ.3.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.58,766 வருமானம்
ரூ.3.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.58,766 வருமானம்...
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி விழாவில் கண்கலங்கி எமோஷ்னலான சிம்ரன்
டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி விழாவில் கண்கலங்கி எமோஷ்னலான சிம்ரன்...