” திமுக ஆட்சியில் 4.38 லட்சம் கோடி ரூபாய் கடன்” – பிரச்சார பயணத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

Edappadi Palnisamy Campaign: 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் அம்மா மாடல் அரசு ஆட்சியமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆட்சியில், 4.38 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக கோவையில் மேற்கொண்ட பிரச்சார பயணத்தின் போது பேசியுள்ளார்.

” திமுக ஆட்சியில் 4.38 லட்சம் கோடி ரூபாய் கடன்” -  பிரச்சார பயணத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

கோப்பு புகைப்படம்

Updated On: 

09 Jul 2025 14:16 PM

2026 ஆம் ஆண்டில் அம்மா மாடல் அரசு அமையும் என எடப்பாடி பழனிசாமி கோவையில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது பேசி உள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் முதல் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு உள்ளார். இதனை ஜூலை 7 2025 அன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கினார். தொடர்ச்சியாக ஜூலை 21 2025 வரை மேற்கொள்கிறார். இதில் பல்வேறு தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரோட் ஷோ நடத்தி மக்களை சந்திக்கிறார். அந்த வகையில் இரண்டாவது நாளான ஜூலை 8 2025 தேதியான நேற்று கோவை வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பிரச்சார பயணத்தின் போது பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் உடன் இருந்தார்.

இந்த பிரச்சார சுற்றுப்பயணத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து சிறப்பு பேருந்து மூலம் பேசினார். அப்போது பேசிய அவர், ” இந்த மாவட்டம் அண்ணா திமுகவின் கோட்டை. அதிமுக மற்றும் பாஜகவினர் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு உழைப்பவர்கள் திமுகவை. போல் சுயநலவாதிகள் அல்ல எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் தன் குடும்பத்துக்கு என்ன லாபம் என திமுக பார்க்கும். 2011 ஆம் ஆண்டுக்குப் பின் கோவை மாநகரம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் நன்று அறிவீர்கள். கோவை மாநகராட்சி வளர்ந்து வரும் மாநகராட்சி. எங்கெல்லாம் பாலம் வேண்டுமோ அங்கு பாலங்களைக் கட்டிக் கொடுத்த அரசு அதிமுக.

திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. இருசக்கர வாகனத்தில் சென்ற காவலரை தாக்கி அவரது மனைவியிடம் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். காவலர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத நிலை மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்? என்றார்

 எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்

அதிகரிக்கும் போதை பழக்கம்:

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா பயன்பாடு குறித்து திமுக அரசுக்கு எடுத்துரைத்தோம். ஆனால் அது பற்றி சிறிதும் கவலைப்படாமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. போதையின் பாதையில் செல்லாதீர்கள் என ஒரு முதலமைச்சரே சொல்லும் நிலையில் அந்த அளவிற்கு போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து இருக்கிறது.

4.38 லட்சம் கோடி கடன்:

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின் தான். வரி மேலாண்மை குழு அமைத்து கடனை குறைப்பதாக சொன்னீர்கள். நீங்கள் கடனை குறைக்காமல் விட்டாலும் பரவாயில்லை 4.38 லட்சம் கோடி ரூபாய் கடன் திமுக ஆட்சியில் இருக்கிறது.

Also Read : புதுக்கோட்டை : பேனரில் அமைச்சர் மெய்யநாதன் படம் மிஸ்ஸிங்.. வாக்குவாதம்

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்க வேண்டும் இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி இயங்குகின்ற ஒரே கட்சி அதிமுக மட்டும் தான் திமுக பொறுத்த வரை ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் ஆகியவை அனைத்து துறைகளிலும் நடக்கிறது. இதற்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும் என பேசி உள்ளார்