விஜய் பிரச்சாரத்திற்காக சிறப்பு குழு.. முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தலைமை கழகம்..

TVK Vijay Campaign: நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, ஏற்பாட்டாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரச்சாரம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் இந்த குழு மேற்கொள்ளும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் பிரச்சாரத்திற்காக சிறப்பு குழு.. முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தலைமை கழகம்..

கோப்பு புகைப்படம்

Published: 

19 Sep 2025 14:02 PM

 IST

சென்னை, செப்டம்பர் 19, 2025: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், 2025 செப்டம்பர் 20ஆம் தேதி நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நாளை நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டாளர்கள் குழு என தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தரப்பில் அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தரப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு, நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து சாலை வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு மக்களை சந்தித்து வருகிறார். மேலும், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் உரையாற்றியும் வருகிறார்.

சட்டமன்ற தேர்தலும் அரசியல் கட்சி நகர்வுகளும்:

அதேபோல், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் “உள்ளம் தேடி இல்லம் நாடி” என்ற பெயரில் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது பிரச்சாரப் பயணத்தை 2025 செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கியுள்ளார். வெளியிடப்பட்ட தகவலின் படி, 2025 டிசம்பர் 20ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம்.. நாளைய பிளான் கேன்சல்..

நாளை விஜய் பிரச்சாரம்:

அந்த வகையில், நாளை நாகை மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கு முன்னதாக திருச்சியில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தின் போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியதால், அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறவுள்ள பிரச்சாரத்திற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: விஜய் வீட்டில் நுழைந்த மர்ம நபர்.. ஷாக்கான காவலர்கள்… நடந்தது என்ன?

தனி குழு அமைத்து அறிவிப்பு:


அந்த வகையில், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாட்டாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக மாவட்ட பொறுப்பாளர்களை உள்ளடக்கிய தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வெற்றிக்கழக தலைவர் விஜயின் சுற்றுப்பயணமும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.