இந்த சாலைகளில் குறைவான சுங்க கட்டணம்.. அமலுக்கு வந்த அசத்தல் அம்சம்!
New Tollgate Rules From Today | இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சுங்க கட்டண வசூல் முறையில் இன்று முதல் முக்கிய மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 15 : இந்தியாவில் (India) வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் குறிப்பிட்ட எல்லைகளை தாண்டி செல்லும்போது சுங்க கட்டணம் (Toll Gate Tax) செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தியா முழுவதும் இந்த சுங்க கட்டண முறை அமலில் உள்ள நிலையில், அது மத்திய அரசு முக்கிய மாற்றம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அந்த மாற்றம் இன்று (பிப்ரவரி 15, 2026) அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், சுங்க கட்டண முறையில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள முக்கிய மாற்றம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சுங்கச்சாவடிகளின் கட்டணம் குறைகிறது – மத்திய அரசு
நீங்கள் ஒரு விரைவு சாலையில் பயணம் செய்கிறீர்கள், அந்த சாலை இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. அந்த சாலையின் பாதி கட்டுமானம் மட்டுமே முடிந்துள்ளது, இன்னும் மீதி கட்டுமானம் நிலுவையில் உள்ளது அல்லது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் நீங்கள் அந்த சாலையை கடந்து செல்கிறீர்கள் என்றால், நீங்கள் அந்த சுங்கச்சாவடியில் முழுமையான கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. அத்தகைய சாலைகளை கொண்ட சுங்கச்சாவடிகளை கடக்கும்போது பகுதி அளவு கட்டணம் செலுத்தினால் போதும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : உடல் உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு வாழ்க்கை கொடுத்த 10 மாத குழந்தை.. கேரளாவில் மனதை உலுக்கும் சம்பவம்!
குறைவான கட்டணம் செலுத்தினால் போதும்
Government of India Amends National Highways Fee Rules for Partially Operational Expressways!
The Government of India has notified an amendment to the National Highways Fee (Determination of Rates and Collection) Rules, 2008, for users of National Expressways that are only… pic.twitter.com/wr8sma0kx8
— NHAI (@NHAI_Official) February 12, 2026
முன்னதாக கட்டுமானம் முழுமையாக நிறைவடையாத சாலைகளிலும் முழுமையான சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இனி அப்படி வசூல் செய்யப்படாது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய சுங்கச்சாவடி கட்டண முறை இன்று (பிப்ரவரி 15, 2026) முதல் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.