ஆதாரில் இந்த விவரங்களை ஒருமுறை மட்டுமே அப்டேட் செய்ய முடியும்.. என்ன என்ன தெரியுமா?

Aadhaar Details Change Rules | இந்தியர்களுக்கு ஆதார் கார்டு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டில் இந்த சில விஷயங்களை ஒரே ஒரு முறை மட்டுமே மாற்றம் செய்ய முடியும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது.

ஆதாரில் இந்த விவரங்களை ஒருமுறை மட்டுமே அப்டேட் செய்ய முடியும்.. என்ன என்ன தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Updated On: 

20 Mar 2026 13:26 PM

 IST

இந்தியர்களுக்கான மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களால் ஆதார் கார்டு இல்லை என்றால் பல வேலைகளை செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டு குறித்த சில முக்கிய விஷயங்களை தெரிந்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. இந்த நிலையில், ஆதார் கார்டில் எந்த விஷயங்களை ஒரே ஒரு முறை மட்டும் மாற்ற முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதாரில் இந்த விவரங்களை ஒருமுறை மட்டுமே அப்டேட் செய்ய முடியும்

ஆதார் கார்டில் இருக்க வேண்டிய விவரங்கள் மிக தெளிவாக இருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. இல்லையென்றால் அரசின் பல சேவைகளை பெற முடியாமல் போய்விடும். இந்த நிலையில், பொதுமக்கள் தங்களது ஆதாரில் உள்ள விவரங்களை மாற்றிக்கொள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) அனுமதி வழங்குகிறது. ஆனால், சில விவரங்களை ஒரே ஒரு முறை மட்டுமே மாற்ற அனுமதி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : அப்பா சொத்தில் குழந்தைகளுக்கு உரிமை இல்லையா? நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு

இந்த விவரங்களை ஒருமுறை மட்டுமே மாற்றம் செய்ய அனுமதி

ஆதார் கார்டில் ஒரே ஒரு முறை மட்டுமே மாற்றம் அல்லது திருத்தம் செய்யக்கூடிய விவரங்கள் இவை தான்.

பிறந்த தேதி

ஆதார் எடுக்கும்போது உங்களது பிறந்த தேதி தவறாக குறிப்பிட்டப்பட்டால் உங்களுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே அதனை மாற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும். அதற்கான முறையான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இல்லை என்றால் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதனை நிராகரித்துவிடும்.

பாலினம்

ஆதார் கார்டு வைத்திருக்கும் நபர் தனது பாலின விவரத்தை தவறாக பதிவு செய்திருந்தால் அதனை திருத்திக்கொள்ள ஒரே ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாறு ஒருமுறை திருத்தம் செய்தால் அதற்கு பிறகு பாலினத்தை மாற்றம் செய்ய அனுமதி இல்லை.

இதையும் படிங்க : தமிழகத்திற்கான முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவித்த மத்திய அரசு.. பெரும் பலன் அடைய போகும் தமிழகம்!

ஆதார் கார்டை பொருத்தவரை பெயர் மற்றும் பாலினத்தை தவிற மற்ற விவரங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுமதி வழங்குகிறது. எனவே பயனர்கள் இந்த விவரங்களை திருத்தும்போது கவனமாக செயல்பட வேண்டும். இல்லை என்றால், மீண்டும் இந்த விவரங்களை திருத்த முடியாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்