Gold Price : இன்னும் 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை எவ்வளவாக இருக்கும்?.. நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்!
Gold Price in Next 5 Years | தங்கம் விலை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இப்போதே தங்கம் விலை சவரன் ரூ.80,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படும் நிலையில், இன்னும் 5 ஆண்டுகளில் தங்கம் விலை என்னவாக இருக்கும் என பார்க்கலாம்.

இந்தியாவில் தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் கடும் உயர்வை சந்தித்து வரும் நிலையில், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தங்கத்தின் தற்போதைய விலையே தலை சுற்ற வைக்கும் விதமாக உள்ள நிலையில், எதிர்காலத்தில் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் என்ற அச்சம் எழ தொடங்கியுள்ளது. இந்த நிலையில், இன்னும் ஐந்த ஆண்டுகளில் அதாவது 2030 ஆம் ஆண்டில் தங்கம் விலை என்னவாக இருக்கும் என்பது குறித்து நிபுணர்கள் தங்களது கணிப்பை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இன்னும் ஐந்து ஆண்டுகளில் தங்கம் விலை என்னவாக இருக்கும் என்ற நிபுணர்களின் கணிப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.10,000-த்தை தாண்டிய தங்கம் விலை
2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரசரவென உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் தங்கம் விலை சுமார் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு மத்தியில் ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.10,000-த்தை தாண்டும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து வந்தனர். அதேபோல, தற்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10,000-த்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால் தங்கத்தின் விலை இன்னும் ஐந்து ஆண்டுகளில் பல மடங்காக உயரும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : வரலாற்றில் முதல் முறையாக ரூ.80,000-த்தை தாண்டியது தங்கம் விலை.. பொதுமக்கள் பேரதிர்ச்சி!




2025-ல் அதிரடி உயர்வை கண்ட தங்கம் விலை
- ஜனவரி 1, 2025 – ஒரு கிராம் ரூ.7,150, ஒரு சவரன் ரூ.57,200
- பிப்ரவரி 1, 2025 – ஒரு கிராம் ரூ.7,790, ஒரு சவரன் ரூ.62,320
- மார்ச் 1, 2025 – ஒரு கிராம் ரூ.7,940, ஒரு சவரன் ரூ.63,520
- ஏப்ரல் 1, 2025 – ஒரு கிராம் ரூ.8,510, ஒரு சவரன் ரூ.68,080
- மே 1, 2025 – ஒரு கிராம் ரூ.8,775, ஒரு சவரன் ரூ.70,200
- ஜூன் 1, 2025 – ஒரு கிராம் ரூ.8,920, ஒரு சவரன் ரூ.71,360
- ஜூலை 1, 2025 – ஒரு கிராம் ரூ.9,020, ஒரு சவரன் ரூ.72,160
- ஆகஸ்ட் 1, 2025 – ஒரு கிராம் ரூ.9,150, ஒரு சவரன் ரூ.73,200
- செப்டம்பர் 1, 2025 – ஒரு கிராம் ரூ.9,705, ஒரு சவரன் ரூ.77,640
இந்த நிலையில், ஆகஸ்ட் 06, 2025 தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,005-க்கும் ஒரு சவரன் ரூ.80,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க : GST 2.0 : ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் வரும் மாற்றம்.. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையுமா?
தங்கம் விலை இவ்வாறு தொடர்ந்து கடும் உயர்வை சந்தித்து வரும் நிலையில், இன்னும் ஐந்து ஆண்டுகளில் அதாவது 2030 ஆம் ஆண்டு 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.2 லட்சம் வரை அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.