இந்த விஷயங்களை செய்தால் வருமான வரித்துறை உங்கள் வீட்டிற்கு வரும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Income Tax Investigation | நிதி விவகாரங்களில் சட்ட விரோதமாக செயல்படும் நபர்கள் மீது வருமான வரித்துறை அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால், பெரும்பாலான மக்கள் இவை எல்லாம் வருமான வரி சட்டத்திற்கு எதிரானது என தெரியாமல் சில தவறுகளை செய்து வருகின்றனர். அதன் மூலம் அவர்கள் எளிதாக வருமான வரித்துறையின் வலயில் சிக்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த விஷயங்களை செய்தால் வருமான வரித்துறை உங்கள் வீட்டிற்கு வரும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

மாதிரி புகைப்படம்

Published: 

06 Apr 2025 22:20 PM

 IST

நிதி மோசடி (Money Scam), சட்டவிரோத பண பரிவர்த்தனைகளை (Illegal Transaction) தடுக்க வருமான வரித்துறை (Income Tax Department) பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள், தொழிலதிபர்களின் வீடுகள், அலுவலகங்கள் என பல இடங்களில் அதிகாரிகள் சோதனை மேர்கொண்டு வருகின்றனர். நிறுவனங்கள், தொழிலதிபர்களின் வீடுகளில் மட்டுமன்றி, சாமானிய மக்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்காக வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு ஆச்சர்யத்தையும் அதே சமயம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தலாம். ஆனால், அது தான் உணமை. இந்த ஒரு சில தவறுகளை நீங்கள் செய்யும்போது வருமான வரித்துறையின் வலயத்தில் சிக்கி, உங்கள் வீட்டிற்கு வருமான வரித்துறை சோதானைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வருமான வரித்துறையிடம் சிக்க வைக்கும் தவறுகள்

நீங்கள் உங்கள் நிதி மேலாண்மையில் செய்யும் ஒருசில தவறுகள் உங்களை வருமான வரித்துறையின் வலயத்திற்குள் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிலையான வைப்பு நிதி

பெரும்பாலான மக்கள் இந்த நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். அவ்வாறு முதலீடு செய்யும் பொதுமக்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது, நிலையான வைப்பு நிதி திட்டங்களில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்யும் பட்சத்தில் உங்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும் வாய்ப்பு உள்ளது. ரூ.10 லட்சத்திற்கு மேல் செய்யப்படும் முதலீடுகள் மற்றும் டெபாசிட்டுகளை வங்கிகள் நேரடி வரிகள் வாரியத்திடம் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், இதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

சேமிப்பு கணக்கு

பொதுவாக பெரும்பாலான மக்கள் சேமிப்பு வங்கி கணக்குகளை பயன்படுத்துகின்றனர். அதில் தங்களுக்கு தேவையான தொகையை சேமித்து வைக்கின்றனர். இந்த நிலையில், சேமிப்பு கணக்கில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் வைத்திருக்கும் நபர்களுக்கு வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. காரணம், ரூ.10 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்யும் தனிநபர்கள் குறித்த விவரங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கான வாய்ப்பு உள்ளது.

சொத்து

ஒருவர் ரூ.30 லட்சத்திற்கு மேல் சொத்து வாங்கினாலோ அல்லது விற்பனை செய்தாலோ அது குறித்து வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் ரூ.30 லட்சத்திற்கு மேல் சொத்துக்களை வாங்க மற்றும் விற்பனை செய்தால் அது குறித்து வருமான வரித்துறை உங்களிடம் கேள்வி கேட்கலாம்.

இந்த மேற்குறிப்பிட்ட விஷயங்களை நீங்கள் செய்யும்போது உங்களுக்கு வருமான வரித்துறையிடம் இருந்து கேள்வி எழுப்பப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்.... வீடியோ வைரல்
ஆதார் கார்டு நகல்களுக்கு வருகிறது தடை.. விரைவில் அறிமுகமாகும் புதிய விதிகள்!
ரயில்களில் இருக்கும் மஞ்சள், வெள்ளைக் கோடுகளின் அர்த்தம் என்ன தெரியுமா?
YouTube பார்த்து சிகிச்சை செய்து இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி; போலி டாக்டர் கைது