Fixed Deposit : குறைந்த கால அளவீடு கொண்ட எஃப்டி.. அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!

One Year Fixed Deposit Schemes | இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Fixed Deposit : குறைந்த கால அளவீடு கொண்ட எஃப்டி.. அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

24 Aug 2025 00:20 AM

மனிதர்களுக்கு எப்போதுமே பண தேவை இருந்துக்கொண்டே இருக்கும். இதனால் தான் மனிதர்கள் தங்களது எதிர்கால மற்றும் அவசர தேவைகளை கருத்தில் கொண்டு சேமிப்பு (Savings) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அவ்வாறு பொதுமக்கள் முதலீடு செய்ய ஒரு சிறந்த திட்டமாக உள்ளது தான் நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit). இந்த திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் நிலையில், அதில் சிறந்த பலன்களும் கிடைப்பதால் பலரும் இதனை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில், 1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் தனியார் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டம் – அதிக வட்டி தரும் வங்கிகள்

ஹெச்டிஎஃப்சி வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.

கோடக் மஹிந்திரா வங்கி

கோடக் மஹிந்திரா (Kotak Mahindra) வங்கி ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : FD : நிலையான வைப்பு நிதி திட்டம்.. எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!

பெடரல் வங்கி

பெடரல் வங்கி (Federal Bank) ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.40 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு 6.90 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI – State Bank of India) ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

யூனியன் பேங்க் ஆஃப் (Union Bank of India) இந்தியா ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு 6.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.