Credit Card : இந்த காரணங்களால் உங்கள் கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்.. தெரிந்து கொள்ளுங்கள்!

Credit Card Application Rejection | தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்களுக்கு கிரெடிட் கார்டு மிகவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. கிரெடிட் கார்டு இல்லை என்றால் பல தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுபதற்கான முக்கிய காரணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Credit Card : இந்த காரணங்களால் உங்கள் கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்.. தெரிந்து கொள்ளுங்கள்!

மாதிரி புகைப்படம்

Published: 

15 Jul 2025 10:36 AM

தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்களுக்கு கிரெடிட் கார்டு (Credit Card) அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. காரணம், பொதுமக்களால் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வைத்து தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத சூழல் உள்ள நிலையில், அவர்கள் கூடுதல் தேவைகளுக்காக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவருமே கிரெடிட் கார்டுக்காக விண்ணப்பிக்கலாம். ஆனால், கிரெடிட் கார்டு வழங்க வேண்டும் என்றால் வங்கிகள் சில முக்கிய விதிகளை பின்பற்றும். அந்த விதிகளுக்குள் பொருந்தும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிரெடிட் கார்டு வழங்கும். ஒருவேளை வாடிக்கையாளார் வங்கிகளின் அந்த விதிகள் மற்றும் தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை என்றால் வங்கிககள் கிரெடிட் கார்டு விண்ணப்பத்தை நிராகரித்துவிடும். இந்த நிலையில், கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

குறைவான கிரெடிட் ஸ்கோர்

வங்கிகளில் கடன் வாங்குவது மட்டுமன்றி, கிரெடிட் கார்டு பெறுவதற்கும் கிரெடிட் ஸ்கோர் (Credit Score) முக்கியமானதாக உள்ளது. காரணம், கிரெடிட் ஸ்கோர் ஒருவரின் கடன் திருப்பி செலுத்தும் நம்பகத்தன்மையை காட்டுகிறது. இந்த நிலையில், ஒருவர் குறைந்த கிரெடிட் ஸ்கோர் வைத்திருந்தால் அந்த நபர் கடனை திருப்பி செலுத்துவதில் ஏதோ தவறு செய்துள்ளார் என்பதை வங்கிகள் உணர்ந்துக்கொள்ளும். இதன் காரணமாக கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது.

நிலுவையில் உள்ள கடன்கள்

உங்களுக்கு ஏற்கனவே அதிக கடன் மற்றும் மாத தவணைகள் இருந்தால் வங்கிகள் உங்களை அதிக கடன் சுமை கொண்டவராக கருதும். ஒரே நேரத்தில் அதிக கடனை திருப்பி செலுத்துவது சிக்கலை ஏற்படுத்தும் என நினைக்கும் வங்கிகள், உங்களுக்கு மேலும் கடன் வழங்க முன் வராது. இதன் காரணமாகவும் உங்களது கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : உங்கள் வருமானத்துக்கு ஏற்ற கிரெடிட் கார்டு வரம்பு எவ்வளவு? எப்படி கணக்கிடுவது?

வேலைவாய்ப்பு உறுதி தன்மை

வங்கிகள் கடன் வழங்குவதற்கு முன்னதாக விண்ணப்பதாரரின் வேலைவாய்ப்பு உறுதியானதாக உள்ளதா என்பதை சோதனை செய்யும். காரணம், கிரடிட் கார்டுகளை பயன்படுத்தினால் அதற்கு முறையாக கடனை திருப்பி செலுத்த வேண்டும். இந்த நிலையில், ஒருவர் 6 மாதங்கள் கூட ஒரு நிறுவனத்தில் பணிபுரியவில்லை என்றால் அவரால் நிலையான வருமானம் பெற முடியாது என நினைக்கும் வங்கிகள் கிரெடிட் கார்டு விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

குறைந்த வருமானம்

கிரெடிட் கார்டு விண்ணப்பங்களை சோதனை செய்யும் வங்கிகள் முதலில் விண்ணப்பதாரரின் வருமானத்தை குறித்து ஆராயும். காரணம் குறைவான வருமானம் கடன் பெறும் நபர்களை மேலும் நிதி நெருக்கடியில் தள்ளிவிடும் வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொள்ளும் வங்கிகள் கிரெடிட் கார்டு விண்ணப்பங்களை நிராகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.