சென்னையில் ACE Pro அறிமுகம்: எலக்டிரிக், பெட்ரோல், எல்பிஜி என 3 புதிய மாடல்கள் வெளியீடு!

ACE Pro Launched in Chennai : சென்னையில் டாடா மோட்டர்ஸின் ACE pro வாகனத்தின் எலக்ட்ரிக், பெட்ரோல், இரட்டை எரிபொருள் என 3 வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் டிவி9 நெட்வொர்க் இணைந்து இந்திய வணிகர்களுக்கு ஏற்ற வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன.

சென்னையில் ACE Pro அறிமுகம்: எலக்டிரிக், பெட்ரோல், எல்பிஜி என 3 புதிய மாடல்கள் வெளியீடு!

டாடா மோட்டார்ஸின் ACE Pro வாகனங்கள்

Updated On: 

09 Jul 2025 14:58 PM

தன்னம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு, இந்தியா வேகமாக வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் விளங்குகின்றன.   அதன் பின்னணியில் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரமும் சம்மந்தப்பட்டிருக்கிறது. இந்த நிலலையில் அவர்களை ஊக்குவித்து, அவர்களின் வணிகத்தை மேலும் எளிமையாக்கும் விதத்தில் டாடா மோட்டார்ஸின் (Tata Motors) கமர்ஷியல் வாகன பிரிவு மற்றும் டிவி9 நெட்வொர்க் இணைந்து ஒரு சிறப்பான முயற்சியாக “ACE Pro  – இதுவே என் தருணம் என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன.

ACE Pro வாகனத்தின் 3 பிரிவுகள் அறிமுகம்

புனே மற்றும் பெங்களூருவில் வெற்றிகரமான இந்த நிகழ்வு நடத்தப்பட்டிருக்கிறது. இப்போது சென்னை நகரில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்த்சியில் டாடா மோட்டார்சின்  புதிய  ACE Pro வாகனத்தின் மூன்று புதிய மாடல்களை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி  ACE pro-வின் எலக்ட்ரிக், பெட்ரோல், பட்ரோல் மற்ற மின்சாரம் (Electric), பெட்ரோல் மற்றும் இரட்டை எரிபொருள் (பட்ரோல் + எல்பிஜி) ஆகிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதையும் படிங்க: எக்ஸ் ஷோரூம் காரின் விலை குறைவு, ஆன் ரோடு விலை அதிகம் – ஏன் இந்த மாற்றம்?

இந்த நிகழ்வில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கமர்ஷியல் வாகனப் பிரிவின் தலைவரான அனிருத் குல்கர்ணி கலந்து கொண்டு, இந்தியாவின் வணிகக் களத்தில் சிறு தொழிலாளர்களுக்கான எளிய மற்றும் நவீன பயண வாய்ப்புகள் குறித்த பேசினார்.  இந்த நிகழ்வு, Tata ACE வாகனம் இந்திய சாலைகளில் ஓடத் தொடங்கிய 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவு கூறும் விதமாகவும், தன்னம்பிக்கையுடன் செயல்படும் சிறு வியாபாரங்களின் விழாவாகவும் காணப்பட்டது.

நிகழ்வின் முக்கிய அம்சங்கள்

  • புதிய ACE Pro மாடல்களின் நேரடி டெஸ்ட் டிரைவ்

  • விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்கான நிதி உதவி பெறும் வசதி

  • டாடா மோட்டார்ஸ் வழங்கும் ‘டிஜிட்டல் ஹாட்’ மூலமாக, பயணத் தேவைகளுக்கான நவீன டிஜிட்டல் சேவைகள் மற்றும் தீர்வுகள்.

இதையும் படிங்க: ஓட்டுநரின் மீது தவறு இருந்தால் இழப்பீடு கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி – எந்த காரணங்களுக்கு கிடைக்காது?

மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், அதிக சுமை திறனுடன் மற்றும் சக்திவாய்ந்த செயல்திறனுடன், இந்தியாவில் மிகவும் மலிவான மினி டிரக்காக ACE Pro வலம் வருகிறது. இது சிறு குறு வணிகர்கள் முதல் லாஸ்ட் மைல் டெலிவரி டிரைவர்கள் வரை அனைவருக்கும் நம்பிக்கையான வளர்ச்சி கருவியாக மாறியுள்ளது.

ACE Pro – இப்போது என் நேரம் (Ab Meri Baari) என்ற பெயரில் இந்தியாவின் வளர்ச்சி கதையைத் தாங்கி செல்லும் உண்மையான வீரர்களுக்கான மரியாதை விழாவாக அமைந்தது.