உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்.. அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளியது.. RBI அறிவிப்பு
மாநிலங்களின் தனி நபர் வருமானமானது, கர்நாடகாவில் - ரூ.3.80 லட்சம் ஆகவும், தமிழ்நாடு - ரூ.3.61 லட்சம் ஆகவும், குஜராத் - ரூ. 3.31 லட்சம் ஆகவும், மகாராஷ்டிரா - ரூ.3.09 லட்சம் ஆகவும், உத்தரபிரதேசம் - ரூ.1.08 லட்சம் ஆகவும் உள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்
2024-25ஆம் ஆண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி, 2023-24ல் உள்நாட்டு உற்பத்தி ரூ.26.89 லட்சம் கோடியாக இருந்தது, 2024-25ல் ரூ.31.19 லட்சம் கோடியாக, பிரமாண்டமாக 16% அளவுக்கு உயர்ந்துள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். பெரிய மாநிலங்களிலேயே இதுதான் மிக அதிகம் என்று கூறிய அவர், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களால் இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், தனிநபர் வருமானமும் சீராக உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார். அதேசமயம், ஆர்பிஐ வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கையில், கர்நாடகா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : இந்த ஒரு விஷயத்துக்கு உங்களுக்கு 84% வரி விதிக்கப்படும்.. புதிய வருமான வரி விதிகள் கூறுவது என்ன?
ஒரு மாநிலத்தின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த ஆண்டு பண மதிப்பு, ஜிஎஸ்டிபி (GSDP) அதாவது மாநில உள் உற்பத்தி விகிதம் என்று அழைக்கப்படுகிறது. அந்தவகையில், 2024 -2025ம் ஆண்டுக்கான மாநிலங்களின் மொத்த உற்பத்தி புள்ளி விவர கையேட்டினை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் மாநிலங்களுக்கு இடையேயான மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் அனைத்து மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.
அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வெளியிட்ட அறிவிப்பு:
#TamilNadu on TOP,
with a LONG lead,
yet again ♥️🌄The latest “Handbook of Statistics on Indian States 2024–25” released by the Reserve Bank of India says that our Gross State Domestic Product at current prices has grown from Rs. 26.89 lakh crore in 2023–24 to Rs. 31.19 lakh… pic.twitter.com/Rgg1Fu1ZGT
— Dr. T R B Rajaa (@TRBRajaa) December 12, 2025
அதன்படி, மாநிலங்களின் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகித புள்ளி விவரத்தின் படி, தமிழ்நாடு – 16.0 சதவீதமாகவும், கர்நாடகா – 12.8% சதவீதமாகவும், உத்தர பிரதேசம் – 12.7 சதவீதமாகவும், மகாராஷ்டிரா- 11.7 சதவீதமாகவும், குஜராத் – 10.2 சதவீதமாகவும் உள்ளது.
மாநிலங்களின் மொத்த உற்பத்தி மதிப்பு:
மாநிலங்களின் மொத்த உற்பத்தி மதிப்பானது, மகாராஷ்டிரா – ரூ.45.31 லட்சம் கோடி, தமிழ்நாடு – ரூ.31.18 லட்சம் கோடி, உத்தர பிரதேசம் -ரூ. 29.78 லட்சம் கோடி, கர்நாடகா – ரூ.28.83 லட்சம் கோடி, குஜராத் – ரூ.26.72 லட்சம் கோடியாகவும் உள்ளது.
தனி நபர் வருமானம்:
மாநிலங்களின் தனி நபர் வருமானமானது, கர்நாடகாவில் – ரூ.3.80 லட்சம் ஆகவும், தமிழ்நாடு – ரூ.3.61 லட்சம் ஆகவும், குஜராத் – ரூ. 3.31 லட்சம் ஆகவும், மகாராஷ்டிரா – ரூ.3.09 லட்சம் ஆகவும், உத்தரபிரதேசம் – ரூ.1.08 லட்சம் ஆகவும் உள்ளது என ஆர்பிஐ வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : ஆதார் – பான் இணைக்கவில்லை என்றால் ஜன.1 முதல் இவற்றை செய்ய முடியாது!
மேலும், இந்த வளர்ச்சி மாநிலம் இதுவரை அறிமுகப்படுத்திய மிகப்பெரிய நலத்திட்டங்களுக்கு இணையாக நடக்கிறது என்பதை நினைவூட்டுவதாக கூறிய அவர், சிலர் அவற்றை “இலவசங்கள்” என்று அழைத்தார்கள், அவை பொருளாதாரத்தை செயல்படுத்துபவை என்று நாங்கள் கூறினோம். இப்போது, அதற்கு இதுவே ஆதாரமாக அமைந்துள்ளது என்றும் நெகிழ்ந்துள்ளார்.