Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சுயமாக தொழில் தொடங்க வேண்டுமா?.. வெறும் 8% வட்டியில் கடன் வழங்கும் அரசு.. பெண்களுக்கான சிறந்த திட்டம்!

Tamil Nadu Govt Loan Scheme for Minorities | பெரும்பாலான நபர்கள் சுய தொழில் தொடங்க வங்கிகளில் கடன் பெற முயற்சி செய்வர். கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது, அதிக வட்டி உள்ளிட்ட சில பிரட்சனைகளை எதிர்கொள்வர். ஆனால், வெறும் 8 சதவீத வட்டியில் சிறுபான்மையின மக்களுக்கு அரசு சிறு தொழில் செய்வதற்காக கடன் வழங்கி வருகிறது.

சுயமாக தொழில் தொடங்க வேண்டுமா?.. வெறும் 8% வட்டியில் கடன் வழங்கும் அரசு.. பெண்களுக்கான சிறந்த திட்டம்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 04 Jul 2025 19:16 PM

பெரும்பாலான நபர்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் மாத ஊதியத்திற்காக வேலை செய்யும் நபர்களாக இருப்பர். இதில் சிலருக்கு சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்றால் முதலீடு தேவைப்படும். அதற்கான பணத்தை எப்படி தயார் செய்வது என்ற தயக்கத்திலும், இயலாமையிலும் தொழில் தொடங்கும் தங்களது ஆசையை அப்படியே மூடி வைத்து விடுவர். அப்படிப்பட்டவர்களுக்கு தான் அரசு ஒரு அசத்தலான திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் அரசிடம் கடன் பெற்று சிறுதொழில்களை தொடங்கலாம். ஆனால், அதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அது என்ன கட்டுப்பாடு, இந்த திட்டத்தில் யார் யார் பயன் பெறலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சிறுபான்மையினர் மக்களுக்காக அரசு செயல்படுத்தும் அசத்தல் திட்டம்

தமிழ்நாடு அரசின் (Tamil Nadu Government) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TAMCO – Tamil Nadu Minorities Economic Development Corporation) , சுய உதவி குழுக்களுக்கான சிறு கடன்களை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சிறுபான்மையின பெண்கள் மற்றும் ஆண்கள் சுய உதவி குழுக்களை உருவாக்கி அதன் மூலம் கடன் பெற்று சிறுதொழில்களை தொடங்கலாம்.

திட்டத்திற்கு விண்ணப்பிக்க யார் தகுதியானவர்கள்?

இந்த திட்டத்தின் கீழ் காய்கறிக்கடை, கைத்தொழில், சிறு வணிகம், சாலையோர கடைகள் என சிறிய அளவிலான தொழில்களை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. சிறுபான்மை குழுவில் உறுப்பினராக இருந்து, குழுவில் குறைந்தது 6 மாதம் சேமிக்கும் நபர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும். அவ்வாறு குழு அமைத்து பயன்பெற நினைக்கும் சிறுபான்மையினர்கள் தங்களது குழுவில் 60 சதவீதம் கட்டாயம் சிறுபான்மையினர் இருக்க வேண்டும். மீதமுள்ள 40 சதவீத உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

ஒரு உறுப்பினருக்கு எவ்வளவு கடன் வழங்கப்படும்?

இந்த திட்டத்தின் கீழ் இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. முதல் திட்டத்தில் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ரூ. 1 லட்சம் கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி விதிக்கப்படும் நிலையில், 3 ஆண்டுகளுக்குள்ளாக உறுப்பினர்கள் கடனை திருப்பி செலுத்த வேண்டும். இரண்டாவது திட்டத்தில், குழுவில் உள்ள அனைத்து உறுப்பினருக்கும் 1.5 லட்சம் கடன் வழங்கப்படும். இதற்கு பெண்களுக்கு ஆண்டுக்கு 8 சதவீதம் வட்டியும், ஆண்களுக்கு ஆண்டுக்கு 10 சதவீதம் வட்டியும் விதிக்கப்படும். இந்த தொகையையும் 3 ஆண்டுகளுக்குள்ளாக திருப்பி செலுத்த வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பொதுமக்கள் மாவட்ட பிறபடுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆகிய அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.  இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு சாதி சான்று, வருமான சான்று கட்டாயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.