SIP Vs வங்கி கடன்.. சாட்ஜிபிடியிடம் உதவி கேட்ட நபர்.. அசத்தலான அறிவுரை!

Man Asked Help From ChatGPT To Maintain Finance | ஒருவர் தனது நிதி கையாடலை மேம்படுத்த சாட்ஜிபிடியிடம் உதவி கேட்டுள்ளார். அதற்கு சாட்ஜிபிடி அந்த நபருக்கு அசத்தலான அறிவுரை வழங்கியுள்ளது. அது குறித்து சாட்ஜிபிடி என்ன கூறியுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

SIP Vs வங்கி கடன்.. சாட்ஜிபிடியிடம் உதவி கேட்ட நபர்.. அசத்தலான அறிவுரை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

03 May 2026 13:24 PM

 IST

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது எல்லா கேள்விகளுக்கும் சாட்ஜிபிடி (ChatGPT) உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சங்களிடம் உதவி கேட்கின்றனர். அந்த வகையில் ஒருவர் தனது கடன் மற்றும் முதலீடு குறித்து சாட்ஜிபிடியிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சாட்ஜிபிடி அசத்தலான அறிவுரையை வழங்கியுள்ளது. இந்த நிலையில், முதலீடு மற்றும் கடனை கையாளுவது குறித்து சாட்ஜிபிடி அளித்துள்ள விளக்கம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதலீடு மற்றும் கடனை கையாளுவது குறித்து சார்ஜிபிடியிடம் கேட்ட நபர்

சாட்ஜிபிடியிடம் கேட்டுள்ள அந்த நபர், எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. எனக்கு 40 வயது, எனது மனைவிக்கு 38 வயது. நாங்கள் இருவரும் இணைந்து மாதத்திற்கு ரூ.2.5 லட்சம் சம்பாதிக்கிறோம். நாங்கள் 9 சதவீதம் வட்டியுள்ள ரூ.1 கோடி வீட்டு கடன் வாங்கியுள்ளோம். கடன் 25 ஆண்டுகள் திருப்பி செலுத்தும் கால அளவீடு கொண்டுள்ள நிலையில், மாதம் ரூ.83,920 தவணை செலுத்துகிறோம்.

இதையும் படிங்க : இபிஎஃப்ஓ ஓய்வூதியம் ரூ1,000லிருந்து ரூ.7,500 ஆக உயரும் வாய்ப்பு? யாருக்கு நன்மை?

அதுமட்டுமன்றி, நாங்கள் இருவரும் தனித்தனியாக எஸ்ஐபி முதலீடு செய்து வருகிறோம். எங்கள் குழந்தையின் மாத செலவு ரூ.30,000. கார் மாத தவணை ரூ.15,000, வீட்டு செலவுக்காக ரூ.60,000 செலவு செய்கிறோம். மீதமுள்ள பணத்தை எதிர்பாராத செலவுகளுக்காக நாங்கள் பயன்படுத்துகிறோம். எங்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை ஆண்டு போனஸ் கிடைக்கும். நாங்கள் எஸ்ஐபி முதலீட்டை தவிர்த்துவிட்டு கடனை அடைப்பது சிறப்பானதாக இருக்குமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அசத்தலான அறிவுரை வழங்கிய சாட்ஜிபிடி

அவர் கேட்ட இந்த கேள்விக்கு சாட்ஜிபிடி அசத்தலான அறிவுரை வழங்கியுள்ளது. அதாவது எஸ்ஐபி முதலீட்டை முடிக்காமலே கடனை அடைக்கும் எளிதான வழியை வழங்கியுள்ளது. அதாவது, ஆண்டுக்கு ரூ.2 லட்சம் போனஸ் கிடைக்கும் நிலையில், அதனை கடன் ப்ரீபேமெண்டாக செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. அவ்வாறு செலுத்தும்போது, கடன் சுமை குறையும். அதாவது 5 முதல் 7 ஆண்டுகள் முன்கூட்டியே உங்கள் கடனை அடைத்துவிட முடியும்.

இதையும் படிங்க : வணிக சிலிண்டர் விலை உயர்வு – சாலையோர உணவகங்களுக்கு கடும் பாதிப்பு?

அதேசமயம் எஸ்ஐபியை தொடர வேண்டும் என்று சாட்ஜிபிடி அறிவுரை வழங்கியுள்ளது. அதாவது, எதிர்காலத்தை நிதி பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்பதற்காக எஸ்ஐபி முதலீட்டை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..