Silver Price : கடும் சரிவை சந்தித்த வெள்ளி.. ஒரே நாளில் ரூ.20,000 குறைவு!

Silver Price Dropped 20,000 Rupees In Chennai | கடும் உச்சத்தில் இருந்த வெள்ளி கடந்த சில நாட்களாக கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் வெள்ளி ரூ.25,000 சரிவை சந்தித்து விற்பனை செய்யப்படுகிறது.

Silver Price : கடும் சரிவை சந்தித்த வெள்ளி.. ஒரே நாளில் ரூ.20,000 குறைவு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

03 Feb 2026 11:11 AM

 IST

2026 ஆம் ஆண்டு தங்கத்தை (Gold) போலவே வெள்ளியும் (Silver) மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வந்தது. குறிப்பாக சொல்ல வேண்டு என்றால் ஒரு கிராம் வெள்ளி ரூ.400-ஐ தாண்டியும், ஒரு கிலோ வெள்ளி ரூ.4 லட்சத்தையும் தாண்டியும் விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு தங்கத்திற்கு ஈடு கொடுத்து வெள்ளி மிக கடுமையான விலை உயர்வை நோக்கி சென்ற நிலையில், கடந்த சில நாட்களாக வெள்ளியின் நிலை தலை கீழாக மாறியுள்ளது. அதாவது கடந்த சில நாட்களாக வெள்ளி மிக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று (பிப்ரவரி 03, 2026) வெள்ளி ரூ.20,000 சரிவை சந்தித்துள்ளது. வெள்ளி சரிவை சந்தித்து இருந்தாலும், தங்கம் சற்று உயர்வை கண்டுள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

உச்சத்தில் இருந்து கடும் சரிவை சந்தித்த வெள்ளி

மின்சார வாகனங்கள் முதல் மின்சாதன பொருட்கள் வரை அனைத்திலும் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளது, உலக அளவில் வெள்ளியில் அதிக அளவு முதலீடு செய்யப்படுவது ஆகியவை வெள்ளி விலை உயர்வுக்கான முக்கிய காரணிகளாக பார்க்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக வெள்ளியும் கடும் உச்சத்தை அடைந்து வந்தது. குறிப்பாக ஜனவரி 29, 2026 அன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.425-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.4,25,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு மிக கடுமையான உச்சத்தில் இருந்த வெள்ளி கடந்த சில நாட்களாக கடும் சரிவை சந்தித்து ரூ.2 லட்சத்து விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு செக்.. பட்ஜெட்டில் ஷாக் கொடுத்த நிர்மலா சீதாராமன்!

5 நாட்களில் ரூ.1,45,000 சரிந்த வெள்ளி

தேதி  ஒரு கிராம்  ஒரு கிலோ
25 ஜனவரி 2026 ரூ.365 ரூ.3,65,000
26 ஜனவரி 2026 ரூ.375 ரூ.3,75,000
27 ஜனவரி 2026 ரூ.387 ரூ.3,87,000
28 ஜனவரி 2026 ரூ.400 ரூ.4,00,000
29 ஜனவரி 2026 ரூ.425 ரூ.4,25,000
30 ஜனவரி 2026 ரூ.405 ரூ.4,05,000
31 ஜனவரி 2026 ரூ.320 ரூ.3,20,000
01 பிப்ரவரி 2026 ரூ.320 ரூ.3,20,000
02 பிப்ரவரி 2026 ரூ.300 ரூ.3,00,000
03 பிப்ரவரி 2026 ரூ.280 ரூ.2,80,000

மேற்குறிப்பிட்ட தகவலின்படி, சென்னையில் கடந்த 5 நாட்களில் மட்டும் வெள்ளி ரூ.1,45,000 சரிவை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : Cheaper and Costlier in Budget 2026: பட்ஜெட்… எவையெல்லாம் விலை குறையும்? எவை விலை கூடும்? முழு விவரம்!

ஒரே நாளில் ரூ.20,000 குறைந்த வெள்ளி

வெள்ளி கடந்த சில நாட்களாக கடும் சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.20,000 சரிந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280-க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்ந்துள்ளது

வெள்ளி விலை குறைந்துள்ள நிலையில், தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம்  இன்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.15 லட்சம் செலவுசெய்து வளரப்பு நாயை ஆஸ்திரேலியா கொண்டு சென்ற இந்திய தம்பதி
அசாமில் 80 மீட்டர் பாலத்தை உருவாக்கிய அசாம் இளைஞர்
மரணத்திற்குப் பின்னும் வாழ்க்கை உண்டா? மரணத்தை வெல்ல நிபுணர்கள் முயற்சி
உருவாகிறது ரஜினிகாந்தின் பயோபிக்.. இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா?.. வந்தது குட்நியூஸ்!!