இனி இந்த சாலைகளில் சுங்க கட்டணம் குறைவு.. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு!

Toll Gate Fees Announcement | இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகளில் அமலில் உள்ளன. ஒவ்வொரு முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும்போது பொதுமக்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில், சுங்க கட்டண வசூல் முறை குறித்து மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இனி இந்த சாலைகளில் சுங்க கட்டணம் குறைவு.. மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு!

மாதிரி புகைப்படம்

Published: 

14 Feb 2026 11:33 AM

 IST

வெளியூர்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்பவர்கள் குறிப்பிட்ட பகுதியை தாண்டி செல்வதற்குன் சுங்க கட்டணம் (Toll Gate) செலுத்த வேண்டும். இதற்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் வண்டியை நிறுத்தி சுங்க கட்டணம் செலுத்திய நிலையில், தற்போது ஃபாஸ்ட்டேக் (FASTag) மூலம் மிக சுலபமாக ஒரு நிமிடத்திற்கும் குறைவாக சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல முடியும். சுங்கச்சாவடிகளை மேலும் விரைவானதாக மாற்ற சாட்டிலைட் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு சுங்கச்சாவடிகள் தொடர்பான பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வரும் நிலையில், புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்த சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் குறைகிறது

ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுங்க கட்டண வசூல் முறையில் முக்கிய மாற்றம் வர உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, நீங்கள் ஒரு விரைவு சாலையில் பயணம் செய்கிறீர்கள். அந்த சாலை இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை. பாதி கட்டுமானம் மட்டுமே முடிந்துள்ளது. பாதி கட்டுமானம் நடந்துக்கொண்டு இருக்கும்போது அந்த சாலையில் நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால், அந்த சாலைக்கான சுங்கச்சாவடியில் நீங்கள் முழுமையான சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு கட்டுமானம் முழுமையாக முடியாத சுங்கச்சாவடிகளை கடக்கும்போது இனி மிக குறைவான சுங்க கட்டணத்தை செலுத்தினால் போதும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : EPFO : பிஎஃப் கணக்கில் வரவுள்ள ரூ.35,000.. இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்!

பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறை

சுங்கச்சாவடியில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த புதிய நடவடிக்கை பிப்ரவரி 15, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது. இதற்கு முன்னதாக கட்டுமானம் முழுமையாக நிறைவடையாத சாலைகளில் கூட முழுமையான சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் மத்திய அரசு இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Follow Us
மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு கேரளாவில் பிரம்மாண்ட சிலை - ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்பு
உணவளித்தவரின் மரணத்துக்கு வந்து இரங்கல் தெரிவித்த குரங்கு - வைரல் வீடியோ
விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் - பரபரப்பு தகவல்
ரூ.50,000க்காக ஏற்பட்ட தகராறு... வெளிச்சத்துக்கு வந்த மிகப்பெரிய கிட்னி கடத்தல் கும்பல் நெட்வொர்க்