பணத்தை பாதுகாக்கவும், அழிக்கவும் முக்கிய ஆயுதமாக உள்ள மொபைல் எண்.. கண்டிப்பா தெரிந்துக்கொள்ளுங்கள்!

Mobile Number Behind Finance | தற்போதைய சூழலில் பெரும்பாலான பொதுமக்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், ஒருவரின் பொருளாதாரத்தை பாதுகாக்கவும், அழிக்கப்வும் மொபைல் எண் என்ன பங்காற்றுகிறது, அதன் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பணத்தை பாதுகாக்கவும், அழிக்கவும் முக்கிய ஆயுதமாக உள்ள மொபைல் எண்.. கண்டிப்பா தெரிந்துக்கொள்ளுங்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

05 May 2026 12:36 PM

 IST

தற்போதைய சூழலில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. எந்த விதமான செயல்களை செய்வதற்கும் டிஜிட்டல் செயலிகள் உள்ளன. இந்த டிஜிட்டல் செயலிகள் மற்றும் சேவைகளை பெறுவதற்கான முக்கிய அம்சமாக உள்ளது தான் மொபைல் எண். இந்த நிலையில், ஒருவர் தனது பணத்தை பாதுகாப்பதற்கும், இழப்பதற்கும் மொபைல் எண் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மொபைல் எண் எவ்வாறு பணத்தை பாதுகாக்கும் கருவியாகவும், ஆபத்தான அம்சமாகவும் உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

மொபைல் எண்ணை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்

தற்போதைய நிலவரப்படி அனைத்திற்கு கேஒய்சி (KYC – Know Your Customer) மேற்கொள்ள வேண்டிய கட்டாயமாக உள்ளது. குறிப்பாக பணம் மற்றும் பண பரிவர்த்தனைகளை சார்ந்த சேவைகள் மற்றும் செயலிகளுக்கு கட்டாயமாக உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் விதமாக ஓடிபி முறையும் உள்ளது. இதற்கெல்லாம் முதன்மை ஆதாரமாக மொபைல் எண் உள்ளது. இந்த மொபைல் எண்ணால் ஒருவருக்கு தனது நிதியை பாதுகாக்க கூடுதல் அம்சங்களும் அதேசமயம் பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : SIP Vs வங்கி கடன்.. சாட்ஜிபிடியிடம் உதவி கேட்ட நபர்.. அசத்தலான அறிவுரை!

பாதுகாப்பு வழங்கும் மொபைல் எண்

யுபிஐ செயலிகள் உள்ளிட்ட அனைத்து விதமான செயலிகளுக்கு மொபைல் எண் கட்டாயமாக உள்ளது. ஒருவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டாலோ அல்லது பணம் செலுத்தப்பட்டாலோ அது குறித்து உரிய நபருக்கு தெரிய வந்துவிடும். ஒருவேளை அந்த பண பரிவர்த்தனையை தாங்கள் மேற்கொள்ளவில்லை என்றால் அந்த பயனர் அது குறித்து உடனடியாக புகார் அளித்து தங்களது பணத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : தங்கம் வாங்கும்போது பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டுமா?.. புதிய வருமான விதிகள் கூறுவது என்ன?

மொபைல் எண் மூலம் வரும் சிக்கல்கள்

அனைத்து சேவைகள் மற்றும் செயலிகளுக்கும் மொபைல் எண் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மொபைல் எண் மூலம் ஏராளமான மோசடிகள் நடைபெறுகின்றன. குறிப்பாக மூத்த குடிமக்களை குறிவைக்கும் மோசடிக்காரர்கள், பிஷ்ஷிங் (Phishing) உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

ஒருவரின் மொபைல் எண் அவரது பணத்தை பாதுகாப்பதற்கான முக்கிய அம்சமாக உள்ளது. அதே சமயம் அதன் மூலம் சில சிக்கல்களும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..