EPFO : இபிஎஃப்ஓ-ல் இருந்து எந்த எந்த காரணங்களுக்காக பணம் எடுக்கலாம்?

Employee Provident Organization Money Withdrawal Rules | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் உறுப்பினர்கள் தங்களது தேவைகளுக்காக பணம் எடுக்க அனுமதி வழங்குகிறது. இந்த நிலையில், எந்த எந்த காரணங்களுக்காக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் உறுப்பினர்களை பணம் எடுக்க அனுமதிக்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO : இபிஎஃப்ஓ-ல் இருந்து எந்த எந்த காரணங்களுக்காக பணம் எடுக்கலாம்?

மாதிரி புகைப்படம்

Published: 

08 May 2025 20:40 PM

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையில் (EPFO – Employee Provident Fund Organization), ஊழியர்களுக்கு பல சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையில் பிஎஃப் தொகையை வழங்கி வருகிறது. அதாவது, ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, இபிஎஃப் கணக்கில் வரவு வைக்கும். இந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஊழியர்களுக்கு பல சிறப்பு அம்சங்களை வழங்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம்

ஒருவேளை ஊழியர்கள் தங்களது பணி காலம் முழுவதும் பணத்தை எடுக்கவில்லை என்றால் அந்த பணத்தை பயனர்கள் தாங்கள் ஓய்வு பெற்றதும் ஓவூதியமாக பெற்றுக்கொள்ளலாம். ஊழியர்களுக்கு தங்களது பணி காலம் முழுவதும் பணம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டாலும் அதற்கு சில காரணங்கள் இருக்க வேண்டும். சில முக்கிய தேவைகளுக்காக மட்டுமே ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் இருந்து பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இபிஎஃப்ஓ-ல் இருந்து எந்த எந்த காரணங்களுக்காக பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO-ல் ஊழியர்கள் என்ன என்ன காரணங்களுக்காக பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் சில முக்கிய காரணங்களுக்காக மட்டுமே பணம் எடுக்க அனுமதி வழங்குகிறது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருமணம் அல்லது மருத்துவ செலவுக்காக பணம் எடுப்பது

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் குறைந்தது 7 ஆண்டுகள் உறுப்பினர்களாக உள்ளாவர்களுக்கு திருமணம் மற்றும் கல்வி செலவுக்காக பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, திருமணம் மற்றும் கல்விக்காக ஊழியர்களுக்கு 50 சதவீதம் வரௌ பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. திருமணம் மற்றும் கல்விக்காக பணம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டாலும் மொத்தமாக மூன்று முறை மட்டுமே இந்த காரணங்களுக்காக பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.

மருத்து செலவிற்கு பணம் எடுப்பது

ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் அத்தியாவசிய தேவையாக மருத்துவ செலவுகளுக்கு பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. திருமணம் மற்றும் கல்வி செலவுகளுக்கு பணம் எடுக்க உள்ள விதிகளை போல இதற்கு 7 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வெண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. புதிய உறுப்பினர்களும் இந்த தேவைகளுக்காக இபிஎஃப்ஓ-ல் இருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம். அதுமட்டுமன்றி, மருத்துவ தேவைகளுக்காக ஊழியர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.