விமான நிலையங்களில் யாரும் உரிமை கோராத, கைவிடப்பட்ட பைகளை வாங்குவது ஒருவரின் முழுநேர தொழிலாக மாறினால் எப்படி இருக்கும்? 26 வயதான ஸ்காட் பென்சோம் என்ற இளைஞர், விமான நிலையங்களில் ஏலம் விடப்படும் யாரும் உரிமை கோராத பைகளை வாங்கி, அவற்றுக்குள் என்ன இருக்கிறது என்பதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.