மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் மாவட்டத்தில் கோதேஷ்வர் காலனியை சேர்ந்தவர் சௌரப் சர்மா. இவர், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஒரு ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஹேமந்த் சர்மா மற்றும் சச்சின் தியாகி ஆகியோரிடம் இருந்து சௌரப் சர்மா, 2 லட்சம் கடன் பெற்றிருந்தார். அந்த கடனைத் திருப்பிச் செலுத்திய போதும், கூடுதலாக 6 லட்சம் செலுத்த வேண்டும் என அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.