வாடகை ஒப்பந்தம் முடிந்த பிறகும், வாடகையாளர் வீட்டை காலி செய்ய மறுத்தால், வீட்டு உரிமையாளர்கள் குழப்பமும், பதற்றமும் அடைகிறார்கள். ஆனால், இந்த சூழலில் சட்டப்படி சரியான வழியை பின்பற்றுவது மிக முக்கியம். சட்டப்படி, ஒரு வாடகை ஒப்பந்தம் முடிந்தவுடன், அந்த வீட்டில் வசிக்கும் உரிமை வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு தானாகவே முடிவடைகிறது.