பாபா வங்காவின் கணிப்புகள் குறித்து சில சந்தேகம் இருந்தாலும், அவரது கணிப்புகள் உலகம் முழுவதும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. பாபா வங்கா என்பவர் பல்கேரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு பெண் ஜோதிட கணிப்பாளர் ஆவார். பல உலக நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே கணித்ததாக அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். 996 ஆம் ஆண்டு தனது 85வது வயதில் பாபா வங்கா காலமானார். அவர் இறந்த பின்னரும், ஒவ்வொரு ஆண்டும் அவர் உலகின் எதிர்காலத்திற்காகக் கூறியதாக நம்பப்படும் கணிப்புகள் வெளியாகிப் பேசப்படுகின்றன. அந்தவகையில், 2026 இல் என்னென்ன ஆபத்துகள் பூமியில் ஏற்படலாம் என்று பாபா வங்கா ஏற்கனவே கணித்துள்ளதாக அவரை ஆய்வு செய்பவர்கள் கூறியுள்ளனர்.