Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மருத்துவக் காப்பீடு போதவில்லையா? நிதி சிக்கல்களை தவிர்க்க 5 எளிய வழிகள்!

Health Insurance Tips : ஆபத்தான நேரங்களில் ஹெல்த் இன்சூரன்ஸ் நமக்கு மிகவும் கைகொடுக்கிறது. ஆனால் சில நேரங்களில் ஹெல்த் இன்சூரன்ஸை விட கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும். இதுபோன்ற நேரங்களில் பொருளாதார ரீதியாக சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்த கட்டுரையில் நிதி சிக்கல்களை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய எளிய வழிகளை பார்க்கலாம்.

மருத்துவக் காப்பீடு போதவில்லையா? நிதி சிக்கல்களை தவிர்க்க 5 எளிய வழிகள்!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 04 Jul 2025 19:04 PM

நம்முடைய வாழ்க்கையில் சிக்கல்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அத்தகைய ஆபத்து காலங்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக, நோய்கள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் வருகிறது. இத்தகைய சிக்கலான நேரங்களில் நம்மை நம்பிக்கையுடன் பாதுகாக்கும் ஒரு முக்கியமான கருவி தான் மருத்துவ காப்பீடு (Health Insurance). மருத்துவ செலவுகளைச் சமாளிக்கவும், பொருளாதார சிக்கல்களை சந்திக்காமல் இருக்கவும் ஹெல்த் இன்சூரன்ஸ் பெரும் உதவியாக இருக்கிறது. ஆனால், சில நேரங்களில் காப்பீட்டுத் தொகையைவிட அதிகமாக மருத்துவ கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கலாம். அப்போது நாம் கடன் வாங்கி செலவை சமாளிக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற நோயை விட மருத்துவ செலவுகள் நம்மை வெகுவாக பாதிக்கலாம்.

நம்முடைய மருத்துவக் காப்பீட்டில் sum insured என்பது, காப்பீடு வழங்கும் நிறுவனம் உங்களுக்காக அதிகபட்சமாக செலுத்தும் தொகைதான். இந்த தொகை, ஒரு ஆண்டுக்குள் மட்டும் பயன்படுத்தும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கலாம், அல்லது முழு காப்பீட்டுக் காலத்துக்கானதாக இருக்கலாம். உதாரணமாக, உங்கள் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம் என்றால், அதற்கும் மேல் செலவாகும் மருத்துவ கட்டணங்களை காப்பீட்டு நிறுவனம் செலுத்தாது. அந்த மீதமுள்ள தொகையை நீங்கள் நேரடியாக உங்கள் செலவிலிருந்து கட்டவேண்டும்.

உங்கள் மருத்துவ காப்பீட்டை மேம்படுத்த 5 எளிய வழிகள்

டாப் அப் காப்பீடு எடுங்கள்

உங்கள் காப்பீடுக்கான தொகை முடிந்ததும் கூடுதல் மருத்துவ செலவுகளுக்கு டாப்அப் காப்பீடு தான் கைகொடுக்கும். உதாரணமாக ரூ. 2 லட்சம் காப்பீட்டுத் தொகை இருந்தால் கூடுதலாக 8 லட்சம் வரை டாப் அப் பெறலாம். இதன் மூலம் மொத்தமாக ரூ.10 லட்சம் வரை பாதுகாப்பு கிடைக்கும். புதிய காப்பீடு வாங்காமல் கூடுதல் பாதுகாப்பு கிடைக்க இது நல்ல தேர்வு.

காப்பீட்டு தொகைக்கு கட்டுப்பாடு இருக்கா என பாருங்கள்

பல காப்பீடுகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக ரூ. 5 லட்சத்துக்கு பாலிசி தொகை இருந்தாலும், ரூம் வாடகையில் கட்டுப்பாடு இருக்கும். இது நமக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தலாம்.

Co-Pay ஆப்சன் இருக்கா என தெரிந்துகொள்ளுங்கள்

Co-Pay என்றால் ஒரு குறிப்பிட்ட மருத்துவ செலவுகளுக்கு பிறகு, கூடுதலாக நீங்களும் செலவு செய்ய வேண்டியிருக்கும். குறிப்பாக 10 சதவிகிதம் co-pay இருக்கிறது என எடுத்துக்கொண்டால் ரூ.50,000 கட்டணத்துக்கு, கூடுதலாக ரூ.5,000 கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். இது முதியோருக்கான காப்பீடுகளில் அதிகம் இருக்கும்.

குரூப் இன்சூரன்ஸ் இருக்கா என தெரிந்துகொள்ளுங்கள்

பல நிறுவனங்கள் குரூப் இன்சூரன்ஸ் கொடுக்கிறார்கள். இதில் சில நிறுவனங்கள் உங்கள் டாப் அப்பை அதிகரிக்கும் வாய்ப்பை வழங்குகின்றன.

எமெர்ஜென்சி ஃபண்ட் முக்கியம்

நாம் வாங்கும் காப்பீடுகளில் டாப் அப் வசதி இருந்தாலும் சில நேரம் அதுவும் போதாது. அது போன்ற நேரங்களில் அதற்கு குறைந்தது 3 முதல் 6 மாதத்துக்கான நிதியை தயாராக வைத்திருப்பது அவசியம். ஃபிக்சட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்திருப்பது நமக்கு ஆபத்தான நேரங்களில் கைகொடுக்கும்.