மிஸ் பண்ணாதீங்க! பிறப்பு சான்றிதழ் வாங்க இதுதான் கடைசி சான்ஸ் – வெளியான அறிவிப்பு

Birth Certificate Deadline : இந்திய பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969ன் படி குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவாளர் அலுவலகத்தில் தகவல் தெரிவிப்பது கட்டாயம்.  இந்த நிலையில் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மிஸ் பண்ணாதீங்க! பிறப்பு சான்றிதழ் வாங்க இதுதான் கடைசி சான்ஸ் - வெளியான அறிவிப்பு

மாதிரி புகைப்படம்

Updated On: 

13 Apr 2026 18:50 PM

 IST

பிறப்புச் சான்றிதழ் வாங்குவதற்கு 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை மட்டுமே காலக்கெடு கொடுக்கப்பட்டு உள்ளது. குழந்தை பிறந்ததும் அதன் பெயர், பிறந்த வரும் தேதி, பாலினம் போன்ற அனைத்து விவரங்களும் அடங்கிய பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் தான் குழந்தையின் விவரங்களுக்கு சட்டப்பூர்வமான ஆதாரம் என்பதால் பிறப்பு சான்றிதழ் பெறுவது மிக முக்கியம்.  ஆனால் பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கும்போது அதில் பெரும்பாலும் பெயர் இடம்பெற்றிருக்காது. பின்னர் பெயர் வைத்ததும் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்ப்பது அவசியம்.  பெயர் சேர்க்கவில்லை என்றால் பின்னாளில் சிக்கலை சந்திக்க நேரிடும்.

இந்திய பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969ன் படி குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவாளர் அலுவலகத்தில் தகவல் தெரிவிப்பது கட்டாயம்.  அப்படி பிறந்த சில நாட்களுக்குள் பதிவு செய்தால் எந்தவித கட்டணமும் இன்றி பிறப்பு சான்றிதழை பெறலாம். இது குழந்தையின் அடிப்படை உரிமைகளை பெற மிக முக்கியமான ஆவணமாகும்.

இதையும் படிக்க : ஏப்ரல் 14 முதல் 19 வரை.. 4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.. செக் பண்ணுங்க!

பெயர் இல்லாத சான்றிதழ் செல்லாது!

குழந்தை பிறந்ததும் மருத்துவமனையில் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் இருக்காது. அப்படி பெயர் இல்லாத பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளியில் சேர்க்கும் போது, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணபப்பிக்க போன்ற அனைத்து சேவைகளுக்கும் பிறப்பு சான்றிதழ் மிக முக்கியமானது. அதனால் பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்கவில்லை என்றால் உடனடியாக பெயர் சேர்ப்பது நல்லது.

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க காலக்கெடு மற்றும் கட்டணங்கள்

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்ப்பதற்கு, குழந்தை பிறந்த காலகட்டத்தை பொறுத்து விதிமுறைகள் மாறுபடும். குழந்தை பிறந்து 12 மாதங்களுக்குள் பெயர் சேர்க்க விரும்பினால் அதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை.  இதற்காக எழுத்துப்பூர்வ கடிதம் அளித்து தங்கள் குழந்தையின் பெயரை சேர்த்துக்கொள்ளலாம்.

குழந்தை பிறந்து 12 மாதங்களுக்கு பின் 15 ஆண்டுகள் வர ரூ.200 கட்டமம் செலுத்த வேண்டும். உரிய ஆவணங்களுடன் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து சான்றிதழ் பெறலாம்.

குழந்தை பிறந்து 15 ஆண்டுகளை கடந்து விட்டால் பொதுவாக பெயர் சேர்க்க சட்டத்தில் இடமில்லாமல் இருந்து. இந்த நிலையில் அதற்கு தற்போது அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகம் வழங்கியுள்ள சிறப்பு அறிவுரையின் படி, பழைய பதிவுகளில் பெயர் சேர்க்க அரிய வாய்ப்பை அரசு வழங்கியுள்ளது.

இதையும் படிக்க : இபிஎஃப்ஓவில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.10,900 கோடி.. உங்கள் பணத்தை எடுக்க இது கட்டாயம்!

அதன் படி கடந்த ஜனவரி 1, 2000 ஆம் ஆண்டுக்கு முன் பிறந்தவர்கள் மற்றும் 2000 ஆம் ஆண்டு பிறந்து 15 ஆண்டுகள் கடந்தும் பெயர் சேர்க்காதவர்கள் வரும் செப்டம்பர் 26, 2026 அன்றுக்குள் தங்கள் பெயரை பிறப்பு சான்றிதழில் பதிவு செய்து கொள்ளலாம். இதுவே கடைசி அவகாசம் என்பதால் மாநகராட்சி அல்லது நகாரட்சி அலுவலங்களை அணுகி தங்கள் அல்லது தங்களது குழந்தையின் பெயர பிறப்பு சான்றிதழில் சேர்த்துக்கொள்ளலாம்.

வாக்காளர் அடையாள அட்டை முதல் அரசு நலத்திட்டங்கள் அனைத்துக்கும் பிறப்பு சான்றிதழ் மிக முக்கியமான ஆவணமாகும். பிற்காலத்தில் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் அலைவதை விட அரசு வழங்கியுள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி எளிதாக  நம் பெயர் சேர்த்துக்கொள்வது நல்லது.

 

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?