இந்தியாவில் கேஸ் சிலிண்டர் சிக்கல் தீர 3-4 ஆண்டுகள் ஆகும்.. அதிகாரிகள் சொன்ன பகீர் தகவல்!
Gas Cylinder Shortage Issue | ஈரான் போரின் விளைவாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ள நிலையில், இந்தியா மிக கடுமையான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இந்த சிக்கல் தீர மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி புகைப்படம்
ஈரான் போர் (Iran War) காரணமாக இந்தியாவில் (India) கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு (Gas Cylinder Shortage) நிலவி வரும் நிலையில், அதனை சரிசெய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் முழுவதுமாக கேஸ் சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும் என்பது குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரான் போர் காரணமாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டில் இந்தியா
பிப்ரவரி 28, 2026 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு ஈரான் பதில் தாக்குதல் நடத்த தொடங்கிய நிலையில், மிகப்பெரிய போராக வெடித்தது. இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு பதில் அளிக்கும் விதமாக ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு மட்டுமன்றி உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியது.
இதையும் படிங்க : யுபிஐ மூலம் பணம் அனுப்புவதால் சிபில் ஸ்கோர் பாதிக்குமா? உண்மை என்ன?
காரணம், பெரும்பாலான உலக நாடுகள் அந்த வழியாக தான் தங்களது எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றன. ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதன் காரணமாக அந்த வழியாக கப்பல்கள் செல்ல முடியாமல் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உலக நாடுகள் ஸ்தம்பித்தன. குறிப்பாக இந்தியா மிக கடுமையான சவால்களை எதிர்க்கொண்டது.
வீட்டு உபயோக பயன்பாட்டுக்கு மட்டும் சிலிண்டர்கள் வழங்கி, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் முற்றிலும் நிறுத்தம் செய்யப்பட்டன. அதுமட்டுமன்றி, கேஸ் சிலிண்டர் புக் செய்வதற்கான கால அளவும் நிர்ணயம் செய்யப்பட்டது. அதாவது கிராமத்தில் இருப்பப்வர்கள் 45 நாட்களுக்கு ஒருமுறையும், நகரத்தில் இருப்பவர்கள் 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே கேஸ் சிலிண்டர் புக் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. இருப்பினும் உரிய நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : மாறிவரும் விலை – அட்சய திருதியைக்கு தங்கத்தை முன்பதிவு செய்வது நல்லதா?
அரசு அதிகாரிகள் சொன்ன பகீர் தகவல்
இந்தியாவில் கேஸ் சிலிண்டர் சிக்கல் எப்போது தான் முடிவுக்கு வரும் என பொதுமக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான், இந்தியாவில் கேஸ் சிலிண்டர் சிக்கல் முழுவதுமாக சீராக மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும் என்று மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளதாக மணி கண்ட்ரோல் செய்து கூறியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.