Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

SIP: வாரம் ரூ.500 முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம் இதோ!

Small Investments, Big Returns: சிறிய தொகையை முதலீடு செய்து பெரிய இலக்கை அடைய சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வாரம் ரூ.500 சிப் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 10 அல்லது 15 ஆண்டுகளில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என பார்க்கலாம்.

SIP: வாரம் ரூ.500 முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?  முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Jul 2025 20:12 PM

குறைந்த முதலீட்டில் நீண்ட காலத்துக்கு தேவையான சேமிப்பை உருவாக்க விரும்புபவர்கள் மத்தியில் மியூச்சுவல் ஃபண்ட்கள் (Mutual Fund) மூலம் செய்யும் சிஸ்டமேட்டிங் இன்வெஸ்ட்மென்ட் பிளான் ( Systematic Investment Plan)  மிகவும் பிரபலமானது. குறைந்த தொகையிலிருந்து தொடங்கி,  எந்தவித தடங்கலும் இல்லாமல் தொடர்ச்சியாக முதலீடு செய்தால் நல்ல லாபத்தை இது வழங்குகிறது. மேலும் மற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைக் காட்டிலும் இது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.  அதன் மூலம் நிதி ஒழுங்கும், ஒவ்வொரு வாரமும் சேமிக்கும் பழக்கமும் உருவாகின்றது. இந்த கட்டுரையில் மாதம் ரூ.500 முதலீடு செய்தால் 10 முதல் 15 ஆண்டுகளில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என பார்க்கலாம்.

 குறைந்த முதலீடு, அதிக வருமானம்

சிப் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டிய குறைந்தபட்ச தொகை ரூ.500 மட்டுமே. அதை மாதம் ஒருமுறை, இருமாதம் ஒருமுறை அல்லது வாரத்திற்கு ஒருமுறை என உங்கள் வசதிக்கேற்ப தேர்வு செய்யலாம். குறிப்பாக வாரத்தோறும் முதலீடு செய்வது, பெரிய தொகையாக மாறக்குடிய வாய்ப்பை வழங்குகிறது. மேலும் மற்ற முதலீட்டுத் திட்டங்களைக் காட்டிலும் இது பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: மியூச்சுவல் ஃபண்ட்டில் 4 வருடத்தில் ரூ.1 கோடி வருமானம் பெற்ற நபர் – எப்படி நடந்தது?

வாரம் ரூ.500 முதலீடு செய்தால் 10 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும்?

வாரந்தோறும் ரூ.500 முதலீடு செய்தால் 10 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும் என பார்க்கலாம்.  தொடர்ந்து 10 ஆண்டுகளில் தடங்கல் இல்லாமல் முதலீடு செய்தால் நம் முதலீடு ரூ.2,60,700 ஆக இருக்கும். ஆண்டுக்கு 12 சதவிகிதம் வருமானம் கிடைக்கும் பட்சத்தில் 10 ஆண்டுகளில் ரூ.1,87,435 கிடைக்கும். மொத்தமாக முதலீடு மற்றும் லாபம் சேர்த்து ரூ.4,48,315 கிடைக்கும்.

15 ஆண்டுகள் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

தொடர்ந்து 15 ஆண்டுகள், வாரம் ரூ.500 வீதம முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என பார்க்கலாம். 15 ஆண்டுகளுக்கு இடைவேளை இல்லாமல் தொடர்ந்து ரூ.500 முதலீடு செய்தால் நமது மொத்த முதலீடு ரூ.3,91,050 ஆக இருக்கும். ஆண்டுக்கு 12 சதவிகிதம் லாபம் கிடைக்கும் பட்சத்தில் கிடைக்கும் வருமானம் ரூ. 5,16,686 ஆக இருக்கும். முதலீடு மற்றும் லாபம் சேர்த்து நமக்கு ரூ.9,07,736 கிடைக்கும்.

இதையும் படிக்க: ஓய்வு காலத்தில் ரூ.75,000 மாத வருமானம் வேண்டுமா? சிறந்த பிபிஎஃப் திட்டம் இதோ

இந்த இரண்டு முறைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால்,  கூடுதலாக 5 ஆண்டுகள் முதலீடு செய்வதால் நமக்கு ரூ.4.5 லட்சத்திற்கு மேல் லாபம் கிடைக்கும். இது காம்பவுண்டிங் முறையில் வட்டி விகிதம் தொடர்ச்சியாக கிடைப்பதால் ஏற்படும் நன்மை.

இதுவரை முதலீடு செய்தவர்களின் அடிப்படையில் பார்க்கும்போது சில மியூச்சுவல் ஃபண்டுகள் இதைவிட சிறந்த வருமானங்களையும் வழங்கியுள்ளன. இருப்பினும், வரி, பணவீக்கம் (Inflation) போன்றவை லாபத்தைக் குறைக்கக்கூடும் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். வாரத்திற்கு ரூ.500 என்ற குறைந்த தொகையை முதலீடு செய்தாலும் பொறுமையுடன் தொடர்ந்தால், உங்கள் நிதி இலக்கை அடைவதற்கான வலுவான அடித்தளமாக அமைந்துவிடும். முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களுடன் ஒருமுறை கலந்தாலோசிப்பது சிறந்தது.