PPF : வெறும் ரூ.12,500 முதலீடு செய்தால் போதும்.. ரூ.40 லட்சம் பெறலாம்.. எப்படி?

Public Provident Fund Scheme | அரசு பொதுமக்களின் நலனுக்காக அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அரசின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதம் ரூ.12,500 முதலீடு செய்வதன் மூலம் ரூ.40 லட்சம் பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

PPF : வெறும் ரூ.12,500 முதலீடு செய்தால் போதும்.. ரூ.40 லட்சம் பெறலாம்.. எப்படி?

மாதிரி புகைப்படம்

Updated On: 

15 Oct 2025 15:33 PM

 IST

இந்திய நடுத்தர குடும்பங்களின் நம்பகத்தன்மையான சேமிப்பு திட்டங்கள் என்றால் அது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் (Post Office Saving Schemes) தான். இந்த திட்டங்கள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், பொதுமக்கள் எந்த வித தயக்கமும் இன்றி, ஆர்வத்துடன் அவற்றில் முதலீடு செய்கின்றனர். பொதுமக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் நோக்கில் அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய ஒரு திட்டத்தில் மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால் ரூ.40 லட்சம் பெற முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. அது என்ன திட்டம், அதில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்

அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF – Public Provident Fund). பொருளாதாரத்தை கட்டமைக்க நினைக்கும் பொதுமக்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில்,  இந்த திட்டத்தில் மாதம் மாதம் முதலீடு செய்யும் பட்சத்தில் 15 ஆண்டுகள் கழித்து நல்ல லாபத்தை பெற முடியும். இந்த நிலையில், இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதம் ரூ.12,5000 முதலீடு செய்வதன் மூலம் ரூ.40 லட்சம் லாபம் பெறுவது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : PPF, NSC திட்டங்களை விட அதிக வட்டி கிடைக்கும் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. எது தெரியுமா?

ரூ.40 லட்சம் பெறுவது எப்படி?

இந்த அஞ்சலக பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் மாதம் ரூ.12,500 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது 15 ஆண்டுகளில் நீங்கம் மொத்தம் ரூ.22.5 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், 15 ஆண்டுகளில் வட்டியாக மட்டும் ரூ.18.18 லட்சம் பெறுவீர்கள். இந்த நிலையில் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.22.5 லட்சம் மற்றும் அதற்கான வட்டி ரூ.18.18 லட்சம் ஆகியவை சேர்த்து மொத்தமாக திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.40.68 லட்சம் கிடைக்கும்.

இதையும் படிங்க : தனிநபர் கடன் வாங்க போறீங்களா?.. இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!

ஓய்வு காலத்தை திட்டமிடும் நபர்கள், தங்கள் பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமண செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு முதலீடு செய்யும் நபர்களுக்கு இந்த திட்டம் மிக சிறந்த தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.