நீலம், வெள்ளை, மெரூன், ஆரஞ்சு… இந்தியாவில் 4 நிறங்களில் வழங்கப்படும் பாஸ்போர்ட்கள்: அதன் அர்த்தம் என்ன?
Passport: இந்தியாவில் நீலம், வெள்ளை, மெரூன் ஆரஞ்சு என 4 வண்ணங்களில் பாஸ்போர்ட் வழங்கப்படுகின்றன. இதில் ஒவ்வொரு நிறுத்துக்கும் என தனித்தனி காரணங்கள் இருக்கின்றன. இந்த கட்டுரையில் அந்த 4 வகை பாஸ்போர்ட்களின் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் பாஸ்போர்ட் (Passport) என்பது மிக முக்கிய அடையாள ஆவணமாகும். இதில் ஒரு நபரின் பெயர், முகவரி, குடியுரிமை போன்ற முக்கிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இந்தியாவைத் தாண்டி வெளி நாடுகளுக்கு செல்லும்போது இந்த ஆவணம் மிக முக்கியம். காரணம் பாஸ்போர்ட்டில் நம் பயண விவரங்கள் உட்பட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். இதனால் இந்தியாவில் பாஸ்போர்ட் வழங்குவதில் மத்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்கிறது. தற்போது இந்தியாவில் நீலம், வெள்ளை, மெரூன், ஆரஞ்சு என நான்கு வண்ணங்ளில் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வண்ணத்துக்கும் தனித்துவமான காரணம் மற்றும் பயண நோக்கம் உள்ளன. இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நீல நிற பாஸ்போர்ட்
நீலநிற பாஸ்போர்ட் இந்தியாவில் மிகவும் பொதுவானது. இது அதிகம் பயனப்டுத்தப்படுகிறது. இது சாதாரண குடிமக்களுக்கு வெளிநாட்டுக்கு செல்லும் பயணத்திற்கு வழங்கப்படுகிறது. இது சுற்றுலா, வியாபாரம், கல்வி என அனைத்து பயணங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான இந்தியர்கள் இந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்துகின்றனர்.
இதையும் படிக்க : ஏடிஎம் பண பரிவர்த்தனை.. கூடுதல் கட்டணங்களை தவிர்ப்பது எப்படி?.. ஆர்பிஐ கூறும் முக்கிய விதிகள்!
வெள்ளை நிற பாஸ்போர்ட்
இது அரசு அதிகாரிகள் மற்றும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தூதரக பொறுப்பில் இருப்பவர்களுக்கும், அதிகாரப்பூர்வமாக பயணிப்பவர்களுக்கான அனுமதியையும் குறிக்கிறது. இந்த வெள்ளை நிற பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வேகமான விமான நிலைய அனுமதி போன்ற பல சலுகைகளைப் பெறுவர்.
மெரூன் நிற பாஸ்போர்ட்
இந்த வகை பாஸ்போர்ட் இந்திய தூதர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த வகை பாஸ்போர்ட் தூதரக பாதுகாப்பு மற்றும் சர்வதேச சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயணிகளுக்கு உலக அளவில் பாதுகாப்பு கிடைக்கிறது.
இதையும் படிக்க : பெற்றோர் அனுப்பும் பணத்துக்கு வரி செலுத்தணுமா? உண்மை என்ன?
ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்
இந்த நிற பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்யும் நபர்களுக்கு வழங்கப்படுகிறது. இது பெரும்பாலும் குறைந்த கல்வித் தகுதி அடிப்படையில் வெளிநாடு செல்பவர்களுக்கு வழங்கப்படுகிரது. இந்த வகை பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், வெளி நாடுகளுக்கு செல்லும் முன் கூடுதல் குடியுரிமை சோதனைகள் கடைபிடிக்க வேண்டும் என்பது விதி.
இந்தியாவில் வித விதமான வண்ணங்களில் பாஸ்போர்ட்டுகள் இருப்பதை கவனித்திருப்போம். இந்த வகை பாஸ்போர்ட் எந்த நோக்கத்திற்காக பயணிக்கிறார் என்பதை குறிக்க வழங்கப்படுகிறது. இதனிடைப்படையில் விமான நிலையங்களில் சோதனை முறைகள் மாறுபடும். இது இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பயணிக்கும்போது அவர்களுக்கு பிரத்யேக ஒழுங்குமுறையை வழங்குகிறது. இனி பாஸ்போர்ட் பெறும்போது அதன் நிறம் என்ன? என்ன நோக்கத்துக்காக வழங்கப்படுகிறது என அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.