Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India – Pakistan Conflict : பங்குச்சந்தையில் எதிரொலித்த இந்தியா – பாகிஸ்தான் மோதல்!

Stock Market Crash, Sensex and Nifty Plunge | இந்தியா - பாகிஸ்தான் மோதல் காரணமாக பதற்றம் நீடித்து வருகிறது. அதன் எதிரொலியாக பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் மோதலால் பாகிஸ்தான் பங்குச்சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தையும் சரிவை சந்தித்துள்ளது.

India – Pakistan Conflict : பங்குச்சந்தையில் எதிரொலித்த இந்தியா – பாகிஸ்தான் மோதல்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 09 May 2025 17:06 PM

சென்னை, மே 09 : இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையே போர் பதற்றம் நிலவுவதால் இந்திய பங்குச்சந்தை (Indian Share Market) இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் மோதல் காரணமாக பாகிஸ்தான் பங்குச்சந்தை கடும் சவாலை சந்தித்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தையில் இரண்டாவது நாளாக சிறிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் விவகாரம் பங்குச்சந்தையை எவ்வாறு பாதித்துள்ளது, இன்றைய பங்குச்சந்தையின் நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே வெடித்த மோதல்

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் உட்பட மொத்தம் 26 சுற்றுலா பயணிகள் பாகிஸ்தான் பயங்கரவாத குப்மலால் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்துள்ளது. அதன்படி, பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்தியா – பாகிஸ்தான் மோதல் – பங்குச்சந்தையில் எதிரொலி

இந்தியா பாகிஸ்தான் காரணமாக பங்குச்சந்தை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் பங்குச்சந்தை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை சற்று சரிவை சந்தித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் மோதல் காரணமாக நேற்று (மே 08, 2025) கராச்சி பங்குச்சந்தையின் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக நேற்று பாகிஸ்தான் பங்குச்சந்தை கடும் பாதிப்படைந்துள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை சற்று சரிவை சந்தித்தது. அதன்படி நேற்று மட்டும் இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை குறைந்து வர்த்தகம் நடைபெற்றது.

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன?

நேற்று ( மே 08, 2025) இந்திய பங்குச்சந்தை 400 புள்ளிகள் வரை சரிவை சந்தித்துள்ள நிலையில், இன்று ( மே 09, 2025) சென்செக்ஸ் 544 புள்ளிகள் சரிந்து 79,084 புள்ளிகளாக வர்த்தகமானது. இதேபோல, பங்குச்சந்தை நிப்டி 83 புள்ளிகள் சரிந்து 24,130 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

எனது மகன்களுக்காகப் பேசுகிறேன்.. ரவி மோகனை சாடிய ஆர்த்தி!
எனது மகன்களுக்காகப் பேசுகிறேன்.. ரவி மோகனை சாடிய ஆர்த்தி!...
தனுஷூக்கு ஜோடியாகும் மலையாள ஹீரோயின்.. யார் தெரியுமா?
தனுஷூக்கு ஜோடியாகும் மலையாள ஹீரோயின்.. யார் தெரியுமா?...
நியூஸ்9 பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்.. டிவி9 எம்.டி. தொடங்கி வைப்பு
நியூஸ்9 பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்.. டிவி9 எம்.டி. தொடங்கி வைப்பு...
பொய்யான தகவல்களால் உலகை ஏமாற்றும் பாகிஸ்தான்: விக்ரம் மிஸ்ரி
பொய்யான தகவல்களால் உலகை ஏமாற்றும் பாகிஸ்தான்: விக்ரம் மிஸ்ரி...
தயாரிப்பாளர் மகள் திருமணம்.. தோழியுடன் கைகோர்த்து வந்த ரவி மோகன்!
தயாரிப்பாளர் மகள் திருமணம்.. தோழியுடன் கைகோர்த்து வந்த ரவி மோகன்!...
பயனர்களின் மொத்த தகவல்களையும் சேகரிக்கும் கூகுள் குரோம்!
பயனர்களின் மொத்த தகவல்களையும் சேகரிக்கும் கூகுள் குரோம்!...
நான் சிங்கிள் கிடையாது.. காதலை ஒப்புக்கொண்ட விஜய் தேவரகொண்டா?
நான் சிங்கிள் கிடையாது.. காதலை ஒப்புக்கொண்ட விஜய் தேவரகொண்டா?...
இபிஎஃப் அக்கவுண்டில் இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்!
இபிஎஃப் அக்கவுண்டில் இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்!...
கன்னியாகுமரி, ஊட்டிக்கு டூர் போறீங்களா? உற்சாக அறிவிப்பு ..!
கன்னியாகுமரி, ஊட்டிக்கு டூர் போறீங்களா? உற்சாக அறிவிப்பு ..!...
நடிகர் தனுஷின் படத்துடன் மோதும் நடிகர் வைபவின் படம்
நடிகர் தனுஷின் படத்துடன் மோதும் நடிகர் வைபவின் படம்...
300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் இந்தியாவை தாக்க பாகிஸ்தான் முயற்சி
300 முதல் 400 ட்ரோன்கள் மூலம் இந்தியாவை தாக்க பாகிஸ்தான் முயற்சி...