சர்வதேச அளவில் வெளியாகும் டைம் மேகசின் இதழின் முதல் அட்டைப்படத்தில், தனது மார்பக புற்றுநோய் தடுப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகான தழும்புகளை, முதன்முறையாக வெளிப்படையாகக் காட்டியுள்ளார் ஏஞ்சலினா ஜோலி. இந்த புகைப்படங்கள் உலகம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ள நிலையில், தனது வாழ்க்கையின் இந்த பகுதியை இப்போது ஏன் பகிர முடிவு செய்தார் என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.