கேஸ் சிலிண்டர் புக் செய்ய “Smart Booking”.. இண்டேன் கேஸ் அறிமுகம் செய்த புதிய அம்சம்!

Indane Introduced Smart Booking Option | இண்டேன் கேஸ் நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர் புக் செய்வதற்கான தொலைபேசி எண்ணில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், அந்த நிறுவனம் ஸ்மார்ட் புக்கிங் என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம் பல வழிகளில் கேஸ் சிலிண்டர் புக் செய்துக்கொள்ளலாம்.

கேஸ் சிலிண்டர் புக் செய்ய Smart Booking.. இண்டேன் கேஸ் அறிமுகம் செய்த புதிய அம்சம்!

மாதிரி புகைப்படம்

Published: 

13 Mar 2026 11:23 AM

 IST

கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் (Gas Cylinder) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் புக் செய்வதற்காக ஸ்மார்ட் புக்கிங் (Smart Booking) என்ற அம்சத்தை இண்டேன் கேஸ் (Indane Gas) அறிமுகம் செய்துள்ளது. கேஸ் புக் செய்வதற்கான தொலைபேசி எண் செயல்படாத நிலையில், இந்த புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அம்சம் எப்படி செயல்படும், அதன் மூலம் கேஸ் சிலிண்டர் புக் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேஸ் சிலிண்டர் குறித்த முக்கிய கட்டுப்பாடுகள்

மத்திய கிழக்கில் நிலவி வரும் சிக்கல் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதாவது, கிராமப்புறங்களில் ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்த நுகர்வோர், அடுத்த சிலிண்டர் முன்பதிவு செய்ய 45 நாட்கள் காத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க : இனி ரூ.20 லட்சம் வரையிலான சொத்து பதிவுக்கு பான் கட்டாயமில்லை.. ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் புதிய விதி!

அதன்படி, 45 நாட்களுக்கு பிறகே அடுத்த கேஸ் சிலிண்டர் முன்பதிவு ஏற்றுக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. நகர்புற நுகர்வோருக்கான கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் கால அளவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு 21 நாட்களுக்கு பிறகு கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது 25 நாட்களுக்கு பிறகே கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் புக்கிங் அம்சத்தை அறிமுகம் செய்த இண்டேன் கேஸ்

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் இண்டேன் கேஸ் நிறுவனத்தின் முன்பதிவு செய்யும் எண் செயலிழந்தது. இந்த நிலையில், ஸ்மார்ட் புக்கிங் என்ற அம்சத்தை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது வாட்ஸ்அப், இண்டேன் ஆயில் மொபைல் செயலி மற்றும் எஸ்எம்எஸ் மூலம் முன்பதிவு செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்.. ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!

அதாவது, 7588888824 என்ற வாட்ஸ்அப் எண் மூலம், இண்டேன் ஆப் மூலம், 7718955555 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் மற்றும் 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் என பல்வேறு முறைகளில் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
மாணவர்கள் செய்த 'பிராங்க்'.. அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு!
மினாப் பள்ளி தாக்குதல்: அமெரிக்கா மீது சந்தேகம்
மும்பையில் எரிவாயு தட்டுப்பாடு..20% உணவகங்கள் மூடல்..
துபாயில் தவிக்கும் இந்தியர்கள்.. தனது 64 அடுக்குமாடி குடியிருப்புகளை கொடுத்து உதவிய இந்தியத் தொழிலதிபர்..