இந்த தவறை செய்தால் உங்களுக்கு பிஎஃப் பணம் கிடைக்காது.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Important Aspects To Get PF Money | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ள ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த சில விஷயங்கள் இல்லை என்றால் பிஎஃப் பணத்தை எடுக்க முடியாது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்த தவறை செய்தால் உங்களுக்கு பிஎஃப் பணம் கிடைக்காது.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

08 May 2026 17:56 PM

 IST

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் பெயர்களில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO – Employee Provident Fund Organization) திட்டத்தில் கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அந்த தொகை ஊழியர்களின் பிஎஃப் (PF – Provident Fund) கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். இந்த பணத்தை எடுக்க பயனர்கள் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்கலாம். ஆனால், இந்த ஒரு தவறை செய்வதன் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்க முடியாமல் போகலாம். அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிஎஃப்-ல் பணம் எடுக்கும்போது இந்த தவறை செய்யாதீங்க

இந்தியாவில் அனைத்து துறைகளும் விரைவானதாகவும், டிஜிட்டல் மயமாகப்பட்டதாகவும் மாறி வருகிறது. அந்த வகையில் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகமும் விரைவானதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிஎஃப் பணத்தை ஏடிஎம் மற்றும் யுபிஐ செயலிகள் மூலம் எடுத்துக்கொள்ளும் வசதியை இபிஎஃப்ஓ வழங்கியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னதாகவே நீங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க விரும்புகிறீர்கள் என்றால் இந்த சில விஷயங்கள் அவசியமாக உள்ளன.

இதையும் படிங்க : முதலீடு Vs வீட்டு கடன்.. போனஸ் பணத்தை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி?

இந்த விஷயங்கள் இல்லை என்றால் பிஎஃப் பணம் கிடைக்காது

பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க சில அம்சங்கள் முக்கியமானவையாக உள்ளன.

  1. 12 இல்ல எண்கள் உடைய யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் எனப்படும் யுஏஎன் எண் இருக்க வேண்டும்.
  2. ஆதார் எண் மற்றும் வங்கி எண் ஆகியவை பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட வேண்டும்.
  3. பிஎஃப் கணக்கிற்கு கேஒய்சி சரிப்பார்ப்பு மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும்.
  4. ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் உங்களிடம் இருக்க வேண்டும்.
  5. அந்த மொபைல் எண் ஓடிபி மெசேஜ் பெறும் வகையில் ஆக்டிவாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : மினிமம் டியூ Vs டோட்டல் டியூ.. கிரெடிட் பில் கட்டணத்தை செலுத்த தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

மேற்குறிப்பிட்ட இந்த அம்சங்கள் இல்லாமல் பிஎஃப் பணத்தை எடுக்க விண்ணப்பிக்கும் பட்சத்தில் பிஎஃப் பணத்தை எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி